Your cart is empty.
ஒரு மாலையும் இன்னொரு மாலையும்
நவீனத் தமிழில் பெண்ணெழுத்து தீவிரம் பெற்ற கட்டத்தில் முதன்மையாக வெளிப்பட்டவற்றில் ஒன்று சல்மாவின் கவிதை மொழி. தன்னை உணர்ந்த தன் இருப்பை அறிந்த தனது விடுதலையை விழையும் … மேலும்
நவீனத் தமிழில் பெண்ணெழுத்து தீவிரம் பெற்ற கட்டத்தில் முதன்மையாக வெளிப்பட்டவற்றில் ஒன்று சல்மாவின் கவிதை மொழி. தன்னை உணர்ந்த தன் இருப்பை அறிந்த தனது விடுதலையை விழையும் பெண் நிலையைச் சொன்னவை இவரது கவிதைகள். படைப்பெல்லைகளுக்கு அப்பால் உள்ள வெளிகளையும் தொடும் வேட்கை கொண்டவை. கூடவே, இதே திசையில் புதிய மொழிதல்கள் அறிமுகமாகவும் இந்தக் கவிதைகள் தூண்டுதலாக அமைந்தவை. கவிதை வாசகர்கள் அருகி வருவதாகச் சொல்லப்படும் தருணத்தில் சல்மாவின் ‘ஒரு மாலையும் இன்னொரு மாலையும்’ தொகுப்பு எட்டாவது பதிப்பைக் காண்பது வரவேற்புக்குரிய ஆபூர்வ நிகழ்வு.
ISBN : 9788187477020
SIZE : 14.0 X 0.5 X 21.4 cm
WEIGHT : 118.0 grams
These poems pave ways for the language for women’s poetry.
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
மயானத்தில் நிற்கும் மரம்
-‘கோழையின் பாடல்கள்’ (2016) நூலுக்கு முன் வெளியான ‘நிகழ் உறவு’ (1992), ‘கோமுகி நதிக்கரைக் கூழாங்க மேலும்














