Your cart is empty.
பள்ளிகொண்டபுரம்
காலச்சுவடு கிளாசிக் வரிசையில் வெளிவரும் ‘பள்ளிகொண்டபுரம்’ நீல. பத்மநாபனின் நாவல்களில் முதன்மையானது என்று சொல்லலாம். அனந்த நாயரின் துக்கம் கவிந்த வாழ்க்கையைச் சித்தரிக்கும் இந்த நாவலில் கேரளத்தின், … மேலும்
வகைமைகள்: விற்பனையில் சிறந்தவை | விருதுபெற்ற எழுத்தாளர் | தமிழ் கிளாசிக் நாவல் |
காலச்சுவடு கிளாசிக் வரிசையில் வெளிவரும் ‘பள்ளிகொண்டபுரம்’ நீல. பத்மநாபனின் நாவல்களில் முதன்மையானது என்று சொல்லலாம். அனந்த நாயரின் துக்கம் கவிந்த வாழ்க்கையைச் சித்தரிக்கும் இந்த நாவலில் கேரளத்தின், திருவனந்தபுரத்தின் நேற்றைய - இன்றைய கலாச்சார வரலாறும் பின்னிப்பிணைந்துள்ளது. மலையாள நாவலாசிரியர்களில் சிறந்த சிலர் தங்களது பிரபலமான இலக்கியப் படைப்புகளில் திருவனந்தபுரம் எனும் நகரை விளக்கமாய் வர்ணித்துள்ளார்கள். ஆனால், அவர்களுள் ஒருவராலும் - ஸி.வி. இராமன் பிள்ளையாலோ, தகழி சிவசங்கரப் பிள்ளையாலோகூட இந்த நகரின் ஆத்மாவைச் சிக்கெனப் பிடிக்க இயலவில்லை - ஆனால் திரு. நீல. பத்மநாபன் எனும் ஒரு தமிழ் நாவலாசிரியருக்குத்தான் கேரளத்துத் தலைநகரின் ஆத்மாவின் ஒரு பரிபூரணத் தரிசனத்தைப் பெற முடிந்திருக்கிறது” என்று மலையாள விமர்சகர் என்.வி. கிருஷ்ணவாரியரால் பாராட்டப்பட்ட நாவல் ‘பள்ளிகொண்டபுரம்.’
நீல. பத்மநாபன்
நீல. பத்மநாபன் (பி. 1938) பள்ளி நாட்களில் தொடங்கி ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக எழுதிவரும் நீல. பத்மநாபன் கேரளப் பல்கலைக்கழகத்தில் இயற்பியலிலும் மின்பொறியியலிலும் பட்டங்கள் பெற்று, கேரள மின்வாரியத்தில் தலைமைப் பொறியாளராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். திருவனந்தபுரத்தில் வசித்துவருகிறார். ‘பள்ளிகொண்டபுரம்’, ‘தலைமுறைகள்’, ‘உறவுகள்’, ‘தேரோடும் வீதி’, ‘இலை உதிர் காலம்’ உள்பட இருபது நாவல்கள், பதினொரு சிறுகதைத் தொகுப்புகள், ஐந்து கவிதைத் தொகுப்புகள், பதினொரு கட்டுரைத் தொகுப்புகள், மொழியாக்கங்கள் என ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். ‘இலை உதிர் காலம்’ நாவலுக்காகவும் (2007), ‘ஐயப்பப் பணிக்கர் கவிதைகள்’ மொழியாக்க நூலுக்காகவும் (2003) சாகித்திய அக்காதெமி விருதுகள் பெற்றுள்ளார். மேலும் ராஜா அண்ணாமலைச் செட்டியார் விருது (1987), தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் தமிழ் அன்னை விருது (1987), பாஷா பாரதி பரிசு (2006), இலக்கியச் சிந்தனைப் பரிசு (2013) உட்படப் பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். இவரது படைப்புகள் இந்திய மொழிகளிலும் ஆங்கிலம், ஜெர்மன், ரஷிய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவரது எழுத்தையும் வாழ்க்கையையும் பற்றிய குறும் படத்தை சாகித்திய அக்காதெமி வெளியிட்டுள்ளது.
ISBN : 9788189945770
SIZE : 14.0 X 1.0 X 21.5 cm
WEIGHT : 335.0 grams
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
மறியா தாமுவுக்கு எழுதிய கடிதம்
-கடந்த சில ஆண்டுகளில் சு.ரா. எழுதிய 12 கதைகளின் தொகுப்பு இந்நூல்.
சு.ரா.வின் புனைவுலகம் அ மேலும்