Your cart is empty.
பறவையின் வாசனை
கமலா தாஸ் அனுபவத்தின் ஊற்றுக்கண்களைத் தேடிச்சென்ற எழுத்தாளர். திரைகளை அகற்றியபோது கண்ட வாழ்க்கையின் உள்ளொளியைப் பதிவுசெய்வதில் அவர் காட்டிய ஆன்மீகம் சார்ந்த நேர்மையால் மலையாள இலக்கியத்தைக் கடந்து … மேலும்
மொழிபெயர்ப்பாளர்: நிர்மால்யா |
வகைமைகள்: விற்பனையில் சிறந்தவை | மொழிப்பெயர்ப்புச் சிறுகதைகள் | மலையாளச் சிறுகதைகள் |
கமலா தாஸ் அனுபவத்தின் ஊற்றுக்கண்களைத் தேடிச்சென்ற எழுத்தாளர். திரைகளை அகற்றியபோது கண்ட வாழ்க்கையின் உள்ளொளியைப் பதிவுசெய்வதில் அவர் காட்டிய ஆன்மீகம் சார்ந்த நேர்மையால் மலையாள இலக்கியத்தைக் கடந்து அவரது குரல் இந்திய இலக்கியத்திலும் கவனத்தைப் பெற்றது. பெண்மையின் அகப்படாத ரகசிய வியப்புகளை வெளிப்படுத்தும் பலவித முகங்கள் அவரது கதைகளில் துளித்துளியாக நிறைந்துள்ளன. அதிலொன்று பணிவு, அடுத்தது கருணை, வேறொன்று துயரம், மற்றது விலைமகளுக்கானது. இசை, காதல், அன்பு ஆகியவற்றை ஸ்பரிசிக்கப்படாத அனுபவமாக வழங்கும் இக்கதைகள் வாசக மனதைக் களங்கமின்மையால் நிர்வாணப்படுத்துகின்றன. நவீன காலகட்டத்தின் ஆண்பெண் உறவில் கலந்த முரண்களின் விவரிப்புகளே இவரின் கதைகள். கலை, தத்துவ உலகில் சுற்றிப் பிணைக்கப்பட்ட மரபுகளுக்கு அறைகூவல் விடுத்தன கமலா தாஸின் கதைகள். 1953முதல் 1984வரை அவர் எழுதிய நூற்றி நாற்பது கதைகளிலிருந்து படைப்பெழுச்சியின் உச்சத்தைத் தொட்ட தேர்ந்தெடுத்த பதினாறு சிறுகதைகளின் தொகுப்பு இது. நிர்மால்யா
ISBN : 9789352441020
SIZE : 13.8 X 0.7 X 21.4 cm
WEIGHT : 160.0 grams
Born in 1934 in Kerala, Kamala Das was the author of several novels, collections of poetry and short stories in English as well as Malayalam in which she wrote as Madhavikutty. Nominated in 1984 for the Nobel Prize for literature and winner of several literary prizes in India, she drew admirers and critics in equal measure, especially when it came to the way in which she chose to live her life, with a fearless disregard for mindless convention and sheer courage of conviction. When she died in May 2009, she left behind a body of writing that will continue to inspire and move generations of readers in the future. A collection of selected short stories thatdemonstrate Kamala Das’ Special Contribution To The Short Story In Malayalam. This collection is filled with her Subtlety And Power In Dealing With Human Relationships And Intrigues Of Love, Life And Death And Her Earthiness, Sensuousness And Sensuality.
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
பால் மீசை
-துளசி, சுமித்ரா, துர்க்கி, மெஹருன்னிஸா ஆகிய பெண்களின் கதைகள் வழியாகப்
பெண்ணுடலை, மனத்தை, மேலும்














