Your cart is empty.
‘மிதக்கும் மகரந்தம்’ என்ற முதல் தொகுப்பில் வெளிப்படுத்திய தானும் சுற்றமும் சார்ந்த சிறு இடத்தை இந்தத் தொகுப்பில் இன்னும் திருத்தமாக முன்வைக்கிறார் எழிலரசி. தன் அன்றாடத்துக்குள் குறுக்கிடும் நிகழ்வுகளும் மனிதர்களும்தான் அவரது கவிப்பொருள்கள். சொற்சிக்கனத்திலும் பொருட்செறிவிலும் கூர்மையைக் கொண்ட எழிலரசியின் கவிதைகள் சில பெருமலையின் திடம் கொண்டுள்ளன. தானே நிறைந்து நிற்கும் பிரபஞ்சத்தில் காற்றை ஒரு பறவையைப் போல் ஆகாசத்துக்கும் பூமிக்கும் இடையில் பறக்கவைக்கிறார் எழிலரசி. இந்தக் காற்றை ‘தீப்பொதிந்த காற்று’ என்கிறார். இதுபோன்ற வசீகரிக்கும் சொற்பிரயோகங்கள் கவிதைகளில் எழுச்சியுடன் தலைதூக்குகின்றன. ஒரு சொல்கூட உபரியல்லாத இக்கவிதைக் கட்டுகளில் சில கவிதைகளை நாட்டார் பாடல்களின் மெட்டுடன் கோத்திருக்கிறார். தன் திசையில் சமூக நிகழ்வுகளுக்கு எதிர்வினையாகவும் கவிதைகளை உயர்த்திப் பிடிக்கும் இவர், ஆணவக் கொலையால் காலவெளியிலிருந்து மறைந்துவிட்ட கோகுல்ராஜைத் தன் கவிதையில் சந்திக்கிறார். உதிரம் தோய்ந்து மரக்கிளையில் தொங்கிய குலப்பூவைத் தன் மனதில் சுமக்கிறார். தன் மௌனத்தின் கவிதைமொழி கொண்டு மனிதத்தின் கேள்விகளுக்கான பதில்களைக் கண்டடையும் முயற்சியே எழிலரசியின் இந்தக் கவிதைகள்.
ISBN : 9789386820518
SIZE : 14.0 X 0.5 X 21.6 cm
WEIGHT : 111.0 grams