Your cart is empty.
பெருவலி
ஜஹனாரா பேகம் முகலாயப் பேரரசர் ஷாஜஹானுக்கும் அவரது அதீத நேசத்துக்குரிய மனைவி மும்தாஜ் மஹலுக்கும் பிறந்த குழந்தைகளில் மூத்தவள். பதினான்கு வயதிலேயே தந்தைக்கு ஆலோசனை வழங்கும் அரசியல் … மேலும்
ஜஹனாரா பேகம் முகலாயப் பேரரசர் ஷாஜஹானுக்கும் அவரது அதீத நேசத்துக்குரிய மனைவி மும்தாஜ் மஹலுக்கும் பிறந்த குழந்தைகளில் மூத்தவள். பதினான்கு வயதிலேயே தந்தைக்கு ஆலோசனை வழங்கும் அரசியல் நுண்ணறிவு அவளுக்கு இருந்தது. பாரசீக நூல்களில் புலமை யும் இந்துப் புராணங்களில் ஞானமும் குர்ஆன் ஓதுவதில் தேர்ச்சியும் இருந்தன. அவளுக்கு வரலாறும் கவிதையும் தெரிந்திருந்தன. நடனமும் இசையும் தெரிந்திருந்தன. சிற்பக் கலையிலும் கட்டிடக் கலையிலும் நிபுணத்துவம் இருந்தது. அவற்றைச் சார்ந்து கனவு காணவும் கனவை மெய்ப்பிக்கவும் தெரிந்திருந்தது. அவளிடம் யானைகளும் குதிரைகளும் ஒட்டகங்களும் இருந்தன. அடிமைகள் இருந்தனர். கப்பல்கள் இருந்தன. செல்வக் களஞ்சியம் இருந்தது. அதிகாரம் இருந்தது. எனினும், எது இருந்தால் இவை மேன்மை பெறுமோ அந்தச் சுதந்திரம் இல்லாமல் இருந்தது. காரணம் ஜஹனாரா பெண்ணாக இருந்தாள்.
சுகுமாரன்
சுகுமாரன் (பி.1957) கோவையில் பிறந்தவர். அச்சிதழ், தொலைக்காட்சி, நூல் வெளியீட்டுத் துறைகளில் பணியாற்றியவர். கவிஞர், கட்டுரையாளர், நாவலாசிரியர், மொழிபெயர்ப்பாளர், காலச்சுவடு இதழின் பொறுப்பாசிரியர். கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் வாழ்நாள் சாதனையாளருக்கான இயல் விருதை 2016இல் பெற்றுள்ளார். திருவனந்தபுரத்தில் வசிக்கிறார். தொடர்புக்கு: nsukumaran@gmail.com
ISBN : 9789386820358
SIZE : 13.8 X 1.0 X 21.3 cm
WEIGHT : 217.0 grams