Your cart is empty.
சப்தங்கள்
வைக்கம் முகம்மது பஷீரின் புகழ்பெற்ற இரண்டு குறுநாவல்கள் - ‘சப்தங்கள்’, ‘மூணுசீட்டு விளையாட்டுக்காரன் மகள்’ - இந்தத் தொகுப்பில் உள்ளன. ஒரே உலகத்தின் இருவேறு தோற்றங்கள் இந்தக் … மேலும்
மொழிபெயர்ப்பாளர்: குளச்சல் மு. யூசுப் |
வகைமைகள்: விற்பனையில் சிறந்தவை | விருதுபெற்ற எழுத்தாளர் | மொழிபெயர்ப்பு நாவல் |
வைக்கம் முகம்மது பஷீரின் புகழ்பெற்ற இரண்டு குறுநாவல்கள் - ‘சப்தங்கள்’, ‘மூணுசீட்டு விளையாட்டுக்காரன் மகள்’ - இந்தத் தொகுப்பில் உள்ளன. ஒரே உலகத்தின் இருவேறு தோற்றங்கள் இந்தக் குறுநாவல்கள். இது ஒரு விளிம்புநிலை உலகம். ‘சப்தங்க’ளில் இந்த உலகம் இருண்டது. அச்சுறுத்துவது. காமத்தின் கவிச்சையில் புரள்வது. அதன் மனிதர்கள் வேசிகள், அநாதைகள், பிச்சைக்காரர்கள், ஓரினச்சேர்க்கையாளர்கள். ‘மூணுசீட்டு விளையாட்டுக்காரன் மக’ளில் அதே போன்ற மனிதர்கள் இடம்பெற்றாலும் இந்த உலகம் ஒளிமயமானது. வேடிக்கையானது. நகைச்சுவை ததும்புவது. சென்ற நூற்றாண்டின் மையப் பகுதியில் பஷீர் எழுதிய இந்த நூற்றாண்டுக் கதைகள் இவை.
வைக்கம் முகம்மது பஷீர்
வைக்கம் முகம்மது பஷீர் (1908 - 1994) 1908 ஜனவரி 19ஆம் தேதி கேரளா வைக்கம் தாலுகாவில் தலையோலப் பரம்பில் பிறந்தார். பத்தாம் வகுப்பு படிக்கும்போது வீட்டைவிட்டு ஓடி, இந்திய தேசியக் காங்கிரஸில் சேர்ந்து உப்பு சத்தியாக்கிரகத்தில் கலந்துகொண்டார். சுதந்திரப் போராட்ட வீரராக சென்னை, கோழிக்கோடு, கோட்டயம், கொல்லம், திருவனந்தபுரம் சிறைகளில் தண்டனை அனுபவித்தார். பகத்சிங் பாணியிலான தீவிரவாத அமைப்பொன்றை உருவாக்கிச் செயல்பட்டார். அமைப்பின் கொள்கை இதழாக ‘உஜ்ஜீவனம்’ வார இதழையும் தொடங்கினார். பத்தாண்டுகள் இந்தியாவெங்கும் தேசாந்திரியாகத் திரிந்தார். பிறகு ஆப்பிரிக்காவிலும் அரேபியாவிலும் சுற்றினார். இக்காலகட்டத்தில் பஷீர் செய்யாத வேலைகளே இல்லை. ஐந்தாறு வருடங்கள் இமயமலைச் சரிவுகளிலும் கங்கையாற்றின் கரைகளிலும் இந்து துறவியாகவும் இஸ்லாமிய சூஃபியாகவும் வாழ்ந்தார். சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கான மத்திய, மாநில அரசுகளின் ஓய்வூதியம், சிறப்பு நல்கை, இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது, கோழிக்கோடு பல்கலைக்கழகத்தின் டி.லிட்., சம்ஸ்கார தீபம் விருது, பிரேம் நசீர் விருது, லலிதாம்பிகா அந்தர்ஜனம் விருது, முட்டத்து வர்க்கி விருது, வள்ளத்தோள் விருது, ஜித்தா அரங்கு விருது போன்ற பல்வேறு விருதுகள் பெற்றவர். 1994 ஜூலை 5ஆம் தேதி காலமானார். மனைவி: ஃபாபி பஷீர், மக்கள் : ஷாஹினா, அனீஸ் பஷீர்.
ISBN : 9788189945879
SIZE : 13.8 X 0.5 X 21.4 cm
WEIGHT : 130.0 grams
This book includes Basheer’s two very popular short fictions – Sabdangal and Moonucheettu vilayattukaranin Makal.














