Your cart is empty.
திரைகள் ஆயிரம்
சுந்தர ராமசாமியின் கதைத் தொகுப்புகளை மீண்டும் மறுபதிப்பாகக் கொண்டுவரும் திட்டத்தில் வெளிவரும் மூன்றாவது தொகுப்பு ‘திரைகள் ஆயிரம்’. 1975இல் வெளிவந்த முதல் பதிப்பில் உள்ள ‘திரைகள் ஆயிரம்’, … மேலும்
சுந்தர ராமசாமியின் கதைத் தொகுப்புகளை மீண்டும் மறுபதிப்பாகக் கொண்டுவரும் திட்டத்தில் வெளிவரும் மூன்றாவது தொகுப்பு ‘திரைகள் ஆயிரம்’. 1975இல் வெளிவந்த முதல் பதிப்பில் உள்ள ‘திரைகள் ஆயிரம்’, ‘இல்லாத ஒன்று’, ‘தயக்கம்’ ஆகிய மூன்று ‘குறுநாவல்க’ளும் இந்த மறுபதிப்பில் அதே வரிசையில் இடம்பெற்றுள்ளன. ‘திரைகள் ஆயிரம்’ முதல் பதிப்பின் பதிப்புரையில், ‘மூன்று குறுநாவல்களின் தொகுப்பு’ என்றே குறிப்பிடப்பட்டிருந்தது. பின்னர் வெளிவந்த சுந்தர ராமசாமியின் சிறுகதைகளின் முழுத்தொகுப்புகளில் இவை இடம்பெற்றன.
சுந்தர ராமசாமி
சுந்தர ராமசாமி (1931 - 2005) தமிழின் முன்னோடி எழுத்தாளர்களில் ஒருவரான சுந்தர ராமசாமி நாகர்கோவிலில் பிறந்தார். பள்ளியில் மலையாளமும் ஆங்கிலமும் சமஸ்கிருதமும் கற்றார். 1951இல் ‘தோட்டி யின் மக’னைத் தமிழில் மொழிபெயர்த்ததே முதல் இலக்கியப் பணி. 1951இல் புதுமைப்பித்தன் நினைவு மலரை வெளியிட்டார். இவரது முதல் கதையான ‘முதலும் முடிவும்’ அதில் இடம் பெற்றது. மூன்று நாவல்களும் பல கட்டுரைகளும் சுமார் 60 சிறுகதைகளும், பசுவய்யா என்ற பெயரில் கவிதைகளும் எழுதினார். 1988இல் காலச்சுவடு இதழை நிறுவினார். சுந்தர ராமசாமிக்கு டொரொன்டோ (கனடா) பல்கலைக்கழகம் வாழ்நாள் இலக்கியச் சாதனைக்கான ‘இயல்’ விருதை (2001) வழங்கியது. வாழ்நாள் இலக்கியப் பணிக்காகக் ‘கதா சூடாமணி’ விருதையும் (2003) பெற்றார். சுந்தர ராமசாமி 14.10.2005 அன்று அமெரிக்காவில் காலமானார்.
ISBN : 9788189945404
SIZE : 14.0 X 0.6 X 21.5 cm
WEIGHT : 137.0 grams
This is the third installment in the process of reprinting Sundara Ramasamy's collection of short stories as new editions. The three short stories in the first edition of 1975, 'A Thousand Screens', 'One Without' and 'Reluctance', are in the same order in this edition as well. In the review of the first edition of 'A Thousand Screens', it was referred to as a 'collection of three short stories'. These were included in the complete collection of short stories by Sundara Ramasamy which was later published.














