Your cart is empty.


துப்பாக்கிக்கு மூளை இல்லை
நுஃமானின் கவிதைகள் படிமங்கள், உருவகங்கள் ஆகியவற்றின் துணையின்றி வாசகருடன் நேரடியாக உரையாடுபவை. அழுத்தமான … மேலும்
நுஃமானின் கவிதைகள் படிமங்கள், உருவகங்கள் ஆகியவற்றின் துணையின்றி வாசகருடன் நேரடியாக உரையாடுபவை. அழுத்தமான கூற்றுகளைத் தன்னகத்தே கொண்டவை. நேரடித் தன்மையைக் கொண்டிருக்கும் இந்தக் கூற்றுகள் உள்ளார்ந்த கவித்துவத்தினால் வலிமை கூடிய சொற்களாக மாறுகின்றன. ‘துப்பாக்கிக்கு மூளை இல்லை’ என்னும் இத்தொகுப்பு இன வெறுப்புக்கும் வன்முறை அரசியலுக்கும் போருக்கும் எதிரான கவிதைகளைக் கொண்டிருக்கிறது. மதம், மொழி, இனம், தேசியம் என எந்தத் தரப்பையும் சாராத குரலை இந்தக் கவிதைகளில் கேட்கலாம். இக்கவிதைகள் துப்பாக்கிக்கு எதிரானவை. எல்லா விதமான அடக்குமுறைகளுக்கும் எதிரானவை. அமைதியையும் சமாதானத்தையும் சமத்துவத்தையும் வேண்டி நிற்பவை. போரில் வெற்றிபெறுபவர் யாரும் இல்லை என்று சொல்லப்படுவதுண்டு. எல்லாப் போர்களுக்கும் எதிரான குரலைக் கொண்டிருக்கும் இந்தக் கவிதைகள் சமகால அரசியல் கவிதைகளில் தனித்த இடத்தைப் பெற்றுள்ளன.
ISBN : 9789355232786
SIZE : 119.0 X 4.0 X 182.0 cm
WEIGHT : 110.0 grams