Your cart is empty.


உடல் பச்சை வானம்
ஈழத்துக் கவிஞர் அனாரின் மூன்றாம் தொகுப்பு இது. முந்தைய தொகுப்புகளில் வெளிப்பட்ட அவருடைய கவிதை முகம் இதில் வேறு தோற்றம் கொள்கிறது. முந்தைய கவிதைகளில் பெண்ணிருப்பின் உணர்வுநிலையில் … மேலும்
ஈழத்துக் கவிஞர் அனாரின் மூன்றாம் தொகுப்பு இது. முந்தைய தொகுப்புகளில் வெளிப்பட்ட அவருடைய கவிதை முகம் இதில் வேறு தோற்றம் கொள்கிறது. முந்தைய கவிதைகளில் பெண்ணிருப்பின் உணர்வுநிலையில் உரையாடிய கவிஞர் இந்தத் தொகுப்பின் கவிதைகளில் ‘பெண்ணுடல் பூண்ட இயற்கை நான்’ எனப் பிரகடனம் செய்கிறார். தொகுப்பின் கவிதை வரிகளுக்கிடையில் பெண் நீராகிறாள். ஊற்றாக, நதியாக, மழையாக, கடலாக மாறுகிறாள். பெண் நிலமாகிறாள். மலையாக, வயல்வெளியாக உருவங்கொள்கிறாள். பெண் காற்றாகிறாள். மூச்சாக, ஊழிப் புயலாக வடிவெடுக்கிறாள். பெண் ஒளியாகிறாள். அனலாகிறாள். இயற்கை பெண்ணுடலாகிறது. இயற்கை பெண்ணாகிறது.
ISBN : 9788189945978
SIZE : 14.0 X 0.3 X 21.5 cm
WEIGHT : 75.0 grams