Your cart is empty.
வழக்கமான கவிதை நியதிகளுக்கு முகத்தைத் திருப்பிக் கொள்ளும் இசையின் கவிதைகள் அந்தரத்தில் ஒரு கயிற்றைக் கட்டி அதன் வழியே நடக்கத் துணிகின்றன. காவியத்திற்கும் நடைமுறைக்கும் நடுவே அவை சரிபாதித் தூரத்தில் நிற்கின்றன. எந்தப் பக்கம் இருக்கும்போதும் சலிக்காது சிரிக்கின்றன. கடைசி ரயிலைப் பிடிக்க ஓடும் பயணியைப் போல் மூச்சிரைப்புடனே வாழ்க்கையைத் துரத்த வேண்டியிருக்கும் காலத்தில், இக்கவிதைகள் வாழ்க்கைக்கு வெளியே பேசுவது போன்ற பாவனைகளின் வழியே நம் பதற்றங்களைச் சற்றுத் தளர்த்துகின்றன. அச்சங்களுக்குச் சற்று ஓய்வளிக்கின்றன. சஞ்சலங்களின் பிடியிலிருந்து சற்றே விடுதலை அளிக்கின்றன.
ISBN : 9789386820501
SIZE : 13.8 X 0.4 X 21.3 cm
WEIGHT : 108.0 grams