Your cart is empty.
வாழ்வின் தாள முடியா மென்மை
-செக்கோஸ்லோவேகிய பிரெஞ்சு நாவலாசிரியர் மிலன் குந்தேராவின் உலகப் புகழ்பெற்ற கிளாசிக் நாவலான வாழ்வின் தாள முடியா … மேலும்
-செக்கோஸ்லோவேகிய பிரெஞ்சு நாவலாசிரியர் மிலன் குந்தேராவின் உலகப் புகழ்பெற்ற கிளாசிக் நாவலான வாழ்வின் தாள முடியா மென்மை கொந்தளிப்பானதொரு அரசியல் சூழலில் காதல், அடையாளம், தேர்வுக்கான சுதந்திரம் ஆகியவற்றின் சிக்கல்களை ஆராய்கிறது.
1968இல் செக்கோஸ்லோவேகியாமீதான சோவியத் படையெடுப்பின் பின்னணியில் அமைந்த இந்த நாவல், நேர்க்கோட்டில் அமையாத ஏழு பகுதிகளாகக் கொண்டது.
வாழ்க்கையின் பொருளைக் கண்டறிய இரண்டு ஆண்களும் இரண்டு பெண்களும் மேற்கொள்ளும் போராட்டத்தை இந்நாவல் பின்தொடர்கிறது. வாழ்க்கை குறித்த மாறுபட்ட தத்துவ அணுகுமுறைகளை இவர்கள் வழியே குந்தேரா ஆராய்கிறார். நீட்சே போன்றோரின் தத்துவப் பார்வைகளை விசாரணைக்கு உட்படுத்துகிறார். மனித இருப்பின் தெளிவின்மையையும் முரண்பாடுகளையும் இந்நாவல் அலசுகிறது.
ISBN : 9789361101502
SIZE : 14.0 X 1.4 X 21.0 cm
WEIGHT : 565.0 grams
டி.என். ரஞ்சித் குமார் (முகநூலிலிருந்து)
9 Feb 2026
மிலன் குந்தேராவின் ‘வாழ்வின் தாள முடியாத மென்மை’
வாசகர் பார்வை
”நம்பகத்தன்மையான மொழிபெயர்ப்பு”
…1968 இல் ரஷ்யா செக்கோஸ்லேவேகியாவை ஆக்கிரமிப்பு செய்கிறது. இந்த நிகழ்வின் பின்னணியில் தான் நாவல் கட்டமைக்கப்பட்டுள்ளது என்று தெரிந்ததும் வழக்கமாக செய்வது போலவே தோராயமாக சில பக்கங்களைப் புரட்டி வாசித்துப் பார்த்தேன். ப்ரெஞ்சிலிருந்து நேரடியாக தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. நுட்பமான அம்சங்கள் மிகச்சரியாக மொழியில் கடத்தப்பட்டிருந்தன. அதுவே மொழிபெயர்ப்பின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்திவிட்டது...
நன்றி: டி.என். ரஞ்சித் குமார் (முகநூலிலிருந்து)
முழுப்பதிவையும் வாசிக்க:
https://www.facebook.com/photo/?fbid=26005905562375168&set=a.592493937476347













