Your cart is empty.
விஜய நகரம்
-வரலாறும் மாய யதார்த்தமும் ஒன்றிணையும் இடமே சல்மான் ருஷ்டியின் நாவல் களம். தன்வரலாற்றுப் … மேலும்
-வரலாறும் மாய யதார்த்தமும் ஒன்றிணையும் இடமே சல்மான் ருஷ்டியின் நாவல் களம். தன்வரலாற்றுப் பார்வையைப் புனைவாக்கி, பரவசமூட்டும் மொழியில் கூறும் அவருடைய பாணியின் உச்சம் இந்த நாவல்.
ஆட்சி என்றாலே ஆண் என்னும் ஆகிவந்த கட்டுமானத்தைத் தகர்க்கிறது இந்த நாவல். மாய வித்தைக்காரியும் தீர்க்கதரிசியும் காவியகர்த்தாவுமான ஒரு பெண் விஜயநகரப் பேரரசை மாய விதைகள் தூவி நிறுவி, அரசர்களுக்கு ஆலோசனை சொல்லி, ஒரு கட்டத்தில் ஆட்சியும் செய்கிறாள். பெண்களின் பங்களிப்பில் மேன்மையுறும் அரசியலையும் சமூகத்தையும் பெண்களின் பார்வையில் முன்வைக்கிறது இந்தப் புனைவு.
எல்லாம் முடிந்த பின் எஞ்சியிருக்கும் வார்த்தைகள் மட்டுமே வெற்றியாளர்கள் என்று சொல்லி நிறைவுறும் நாவலின் வசீகர மொழி ஆர். சிவகுமாரின் நம்பகமான, படைப்பம்சம் மிகுந்த மொழிபெயர்ப்பில் திரண்டு நிற்கிறது.
ISBN : 9789361102424
SIZE : 14.0 X 2.0 X 21.0 cm
WEIGHT : 750.0 grams
இளங்கோ கிருஷ்ணன் (முகநூல் பதிவு)
10 Apr 2025
எல்லா நகரங்களிலும் எல்லாப் பேரரசுகளிலும் எல்லாப் பண்பாடுகளிலும் இறுதியில் எஞ்சுவது அதிலிருந்து வெளிப்படும் காவியங்கள் மட்டும்தான் என்பதாக இந்த நாவலை எடுத்துக்கொள்ளலாம்.
அந்நியத் தன்மை இல்லாமல் மொழிபெயர்ப்பதில் ஆர்.சிவக்குமார் நிகரற்றவர். இந்நாவலைத் தமிழில் கொடுத்ததற்கு அவருக்கு என் நன்றி.
நன்றி: இளங்கோ கிருஷ்ணன் (முகநூல் பதிவு)
முழுப் பதிவையும் வாசிக்க:
https://www.facebook.com/share/p/1EftLAW7S6/?mibextid=wwXIfr














