Your cart is empty.
ஏழு போராளிகள்!
-இந்திய நாட்டின் விடுதலைக்காகப் பாடுபட்ட ஏழு அயல்நாட்டவரின் கதைகளை இந்நூல்
சொல்கிறது. மேலை நாட்டவரான இவர்கள் பிரிட்டிஷ் காலனியாதிக்கத்திலிருந்து இந்தியாவை
மீட்கப் போராடியவர்கள்.
லட்சியங்களால் உந்தப்பட்ட இவர்கள் … மேலும்
மொழிபெயர்ப்பாளர்: சு. தியடோர் பாஸ்கரன் |
வகைமைகள்: புதிய வெளியீடுகள் | வரலாறு |
-இந்திய நாட்டின் விடுதலைக்காகப் பாடுபட்ட ஏழு அயல்நாட்டவரின் கதைகளை இந்நூல்
சொல்கிறது. மேலை நாட்டவரான இவர்கள் பிரிட்டிஷ் காலனியாதிக்கத்திலிருந்து இந்தியாவை
மீட்கப் போராடியவர்கள்.
லட்சியங்களால் உந்தப்பட்ட இவர்கள் அனைவருமே காந்தியடிகளிடம் ஈடுபாடு
கொண்டிருந்தனர். சிலர் அவரைத் துதித்தனர். சிலர் அவரிடம் கருத்து வேறுபாடு கொண்டாலும்
அவர் பாதையை ஏற்றார்கள்.
உலகின் தலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரான ராமச்சந்திர குஹா கூறும் இந்தக்
கதைகள், இந்திய சுதந்திரப் போராட்டத்தைப் பற்றிய பல புதிய புரிதல்களைத் தருகின்றன.
பிரமிக்கவைக்கும் இந்தப் பதிவுகள் பல இடங்களில் நெகிழவும் வைக்கின்றன.
இந்தியாவைத் தமது சொந்த நாடாக வரித்துக்கொண்ட இந்த ஆளுமைகளோடும் அவர்களின்
வாழ்வோடும் நாம் நெருக்கம் கொள்ளும் வகையில் தியடோர் பாஸ்கரன் இதைத் தமிழில்
தந்திருக்கிறார்.
ISBN : 978-81-19034-83-3
SIZE : 14.0 X 2.5 X 21.5 cm
WEIGHT : 0.55 grams
கிருஷ்ணமூர்த்தி
2 Jul 2025
ராமச்சந்திர குஹா எழுதிய ஏழு போராளிகள் (தமிழில்: சு. தியோடர் பாஸ்கரன்) பற்றிய பார்வை
ஆங்கிலேயர்கள் நம்மை அடக்கி ஆண்டவர்கள் எனும் பதம் நம் பள்ளிப்பாடதிட்டத்தால் உருவேற்றப்படுகிறது. இதற்கு எதிர்முனையில் இந்தியாவிற்காக உழைத்த வெளிநாட்டவர்களும் உள்ளனர் என்பது நமக்கு மாற்று வரலாறாகிறது. அவ்வகையான நூலை இந்தியாவின் சமகால, முக்கியமான வரலாற்றாசிரியரான ராமச்சந்திர குஹா எழுதியிருக்கிறார். எழுத்தாளர் சு.தியோடர் பாஸ்கரனின் சிறப்பான மொழிபெயர்ப்பில் “ஏழு போராளிகள்” எனும் தலைப்பில் வாசிக்கக் கிடைக்கிறது.
வரலாறு வெற்றிகளால் தீர்மானிக்கப்படுகிறது எனும் கூற்றை அவமதிக்கிறது இந்த நூல். வரலாறு சமூக மாற்றங்களால் எழுதப்படுவது. மேம்படும் பண்பாடும், சமூகமும் வரலாறின் அங்கமாகிறது. அதற்கு காரணமாக அமையும் ஏழு பேரின் வாழ்க்கை இந்த நூலில் பேசப்படுகிறது. அனைவரும் வாசிக்க வேண்டிய நூல்.
முழுப்பதிவையும் வாசிக்க:
https://www.facebook.com/share/p/1CgUWtxa17/?mibextid=wwXIfr














