Your cart is empty.
திபுலான் வாராதி
-திபுலான் வாராதி கதையைக் கேட்பவர்களும் சொல்பவர்களும்
அன்பின் தோகை விரித்து வானில் பறப்பார்கள். விண்மீன்கள்
சொல்லும் ரகசியங்களைப் பூமிக்குக் கொண்டுவருவார்கள்.
சாருவி இசைக் குறிப்பு
-திபுலான் வாராதி கதையைக் கேட்பவர்களும் சொல்பவர்களும்
அன்பின் தோகை விரித்து வானில் பறப்பார மேலும்
-திபுலான் வாராதி கதையைக் கேட்பவர்களும் சொல்பவர்களும்
அன்பின் தோகை விரித்து வானில் பறப்பார்கள். விண்மீன்கள்
சொல்லும் ரகசியங்களைப் பூமிக்குக் கொண்டுவருவார்கள்.
சாருவி இசைக் குறிப்பு
-எழுத்தாளர்கள், பல துறைகளைச் சேர்ந்த ஆளுமைகள், வாசகர்கள் ஆகியோருடன் நெருங்கிய நட்பைப் பேணியவர் சுந்தர ராமசாமி. க.நா. சுப்ரமண்யம், சி.சு. செல்லப்பா, கிருஷ்ணன் நம்பி, ஜீவா, என்.எஸ். கிருஷ்ணன், வெ. சாமிநாத சர்மா எனப் பலருடனும் பல ஆண்டுக்காலம் நட்புப் பாராட்டியவர். இந்த நட்புகளின் அனுபவங்கள் நினைவோடையாகப் பாய்கின்றன. இந்த நினைவோடையில் ஆளுமைகளின் சித்திரங்கள் துலங்குவதுடன் ஒரு காலகட்டத்து விழுமியங்களும் சிந்தனைகளும் செயல்பாடுகளும் பிரதிபலிக்கின்றன. அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதோடு நில்லாமல் பல்வேறு விஷயங்கள் குறித்த தன்னுடைய பார்வைகளையும் முன்வைத்தபடி பேசிச் செல்கிறார் சு.ரா. வெவ்வேறு சமயங்களில் பதிவான இந்த நினைவுகளில் க.நா.சு., சி.சு. செல்லப்பா, கிருஷ்ணன் நம்பி, ஜீவா ஆகியோரைப் பற்றிய பதிவுகள் சு.ரா. உயிருடன் இருக்கும்போதே வெளியானவை. இந்தப் பதிவுகளின் எழுத்துப் பிரதியை அவரே கைப்படத் திருத்திக்கொடுத்தார். இந்த நான்கு நினைவோடைகள் மட்டும் தற்போது ஒரே நூலாக வெளியாகின்றன.
-இங்கிலாந்தின் வேல்ஸ் மாகாணத்தில் பேசப்படும் வெல்ஷ் மொழியில் எழுதப்பட்ட சிறுகதைகள் இவை. மொழிவழிச் சிறுபான்மை இனமான வெல்ஷ் மொழி பேசும் மக்கள் தங்கள் மொழி, பண்பாடு ஆகியவற்றில் தனி அடையாளமும் பெருமிதமும் கொண்டவர்கள். ஆங்கிலத்தின் உலகளாவிய ஆதிக்கத்தின் கீழ் முகமற்றுப்போன தங்கள் மொழியின் முகத்தை மீட்டெடுப்பதன் மூலம் தங்கள் பண்பாட்டின் அடையாளத்தை மீட்டெடுப்பதற்கான முயற்சிகளை முன்னெடுக்கிறார்கள்.
வேல்ஸ் மாகாணத்தில் நடைபெற்ற இலக்கியப் பரிமாற்றப் பயிலரங்கில் காலச்சுவடு சார்பில் கலந்துகொண்ட அரவிந்தன், அப்பயிலரங்கின் தொடர்ச்சியாக இக்கதைகளை ஆங்கிலம் வழியே தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். வேல்ஸ் மக்களின் பண்பாடு, மொழிச் சிக்கல்கள், நிலப்பரப்பு, தட்பவெப்ப நிலை என அவர்களது வாழ்நிலையைச் செறிவாகவும் படைப்பூக்கத்துடனும் முன்வைக்கும் கதைகள் இவை.
-மஹ்மூத் தர்வீஷ் அரபு மொழியில் எழுதிய கவிதைகளை ஜாகிர் ஹுசைன் நேரடியாகத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். ஜாகிர் ஹுசைன் மூலக் கவிதையின் உணர்வோட்டத்தை, அதன் வீச்சைச் சிறப்பாகத் தமிழில் கொண்டுவந்திருக்கிறார். நவீன அரபு இலக்கியம் இவர் மூலம் தமிழுக்கு நேரடியாக அறிமுகமாகிறது. மதச்சார்பற்ற நவீன அரபு இலக்கியம் அரபு மூலத்திலிருந்து நேரடியாகத் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது மிகக் குறைவு. இப்பின்னணியில் இத்தொகுப்பு முக்கியமாகிறது.
-வன்முறை இன்றி மாபெரும் சமூக மாற்றத்தைக் கொண்டுவந்த திராவிடக் கட்சிகளின் செயல்பாடுகள் பற்றிய விரிவான முதல் ஆய்வு இது. மத மறுப்பில் தொடங்கி மதச்சகிப்புத்தன்மைவரை திராவிட அரசியல் பெற்றுவந்த மாற்றங்களையும் நூலாசிரியர் பதிவு செய்கிறார். தேர்தல் புள்ளிவிவரங்கள், செய்தித்தாள்கள், கட்சிகளின் துண்டுப் பிரசுரங்கள், திரைப்படங்கள், அரசியல்வாதிகளுடனான நேர்காணல்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட இந்த நூல், இனம் சார்ந்து மக்களை அணிதிரட்டுகையில் சகிப்புத் தன்மையையும் ஜனநாயக உணர்வையும் கட்சித் தலைவர்களும் குடிமக்களும் எப்படிப் பாதுகாத்தார்கள் என்பதையும் காட்டுகிறது. திராவிட இயக்கங்களின் கோட்பாடுகளையும் வெகுசன அரசியலையும் அவற்றின் பன்முகப் பரிமாணங்களுடன் புரிந்துகொள்வதற்கு உதவும் நூல் இது. அபாரமான வாதங்களும் அபரிமிதமான ஆதாரங்களும் கொண்ட இந்த நூல் அரசியல் ஆர்வலர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் பலனளிக்கக் கூடியது. வெகுமக்களியத்தின் உலகளாவிய ஆற்றலைப் புரிந்துகொள்வதற்கான அணுகுமுறையை நரேந்திர சுப்பிரமணியன் முன்வைக்கிறார். வெகு மக்களியம் குறித்த உலக அளவிலான ஒப்பாய்வில் இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் உள்ள முக்கியத்துவத்தை இது தெளிவுறக் காட்டுகிறது. டேவிட் லட்டன், நியூயார்க் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறைப் பேராசிரியர்.
-அருணா ராயும் சங்கதன் கூட்டமைப்பும் இணைந்து எழுதியிருக்கும் இந்த நூல் தகவல் அறியும் உரிமைச் சட்டம் கொண்டுவருவதற்கான போராட்டத்தில் பங்கேற்றவர்கள் குறித்தும், அவர்களது கதைகளையும் சொல்கிறது. மிக அசாதாரணமான அந்த மனிதர்கள், உண்மையான அரசு நிர்வாகம் என்றால் என்ன என்பதை அதிகாரத்தில் இருப்பவர்களை, குறிப்பாக ஊழல்வாதிகளைக் கேள்வி கேட்டதன் மூலம் நமக்குப் புரியவைத்தவர்கள்.
'தி இந்து'
உயிர்ப்புடன், எங்கும் பரவியிருந்த ஒரு புரட்சியைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள விரும்புகிறவர்களுக்கு இந்த நூல் ஒரு சிறந்த ஆதாரம். அது ஒரு தகவல் புரட்சி; உங்கள் வாழ்க்கையைப் பாதிக்கும் ஊழலை, அரசாங்கத்தின் அத்துமீறல்களைத் தடுக்க முடியவில்லை என்றாலும் அதன் வேகத்தைக் குறைக்கும் திறன் கொண்ட புரட்சி.
'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்'
சமீபத்திய ஆண்டுகளில் இயற்றப்பட்ட சட்டங்களில் ஆர்டிஐ மிக முக்கியமானது. சரியாகச் செயல்படுத்தப்பட்டால், நகர்ப்புற, கிராமப்புற ஏழைகளுக்கு, அவர்களின் அடிப்படை வாழ்க்கைத் தேவைகளை வழங்கவும், ஓரளவு சமூக நீதியை உறுதிப்படுத்தவும் இது பயன்படும்.
ரொமிலா தாப்பர், வரலாற்றாசிரியர்
வெவ்வேறு களத்தையும் காலத்தையும் பின்புலமாகக் கொண்ட பதின்மூன்று கதைகளின் தொகுப்பு இந்த நூல். இவை அனைத்தும் ஆங்கிலம் வழியாகத் தமிழாக்கம் செய்யப்பட்டவை என்பது மட்டும் இவற்றுக்கு இடையிலான ஓற்றுமை. இருபதாம் நூற்றாண்டின் மையப் பகுதிக்கு முந்தைய ஆண்டுகள் முதல் இருபத்தியோராம் நூற்றாண்டின் ஆரம்பப் பதிற்றாண்டுகள் வரையான காலப் பகுதியில் எழுதப்பட்டவை இந்தக் கதைகள். அந்தந்தக் காலத்தின் அடையாளங்களையும் அந்தந்த இடத்தின் சின்னங்களையும் அந்தந்த மக்கள் இனத்தின் வாழ்வனுபவங்களையும் இவை எதிரொளிக்கின்றன இலக்கியக் கலையின் உச்சம் என்று போற்றப்படும் எழுத்தாளர்களும் அறிமுகச் சாதனையாளர்களும் கதைகளின் பின்னணியில அணிவகுக்கிறார்கள்.மூலத்தின் செறிவுக் குறையாமல் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ள இந்தக் கதைகள் தமிழ் வாசகனிடம் ஒரு செய்தியை சொல்கின்றன. அது - கதை என்பது வெறும் புனைவு மட்டுமல்ல
-1994 முதல் 2000 வரை காலச்சுவடில் வெளிவந்த மொழிபெயர்ப்புக் கதைகளின் தொகுப்பு இந்நூல்.
மேற்கத்திய, ஜப்பானிய, லத்தீன் அமெரிக்கப் படைப்புகளுடன் இந்திய மொழிக் கதைகளும் இதில் இடம்பெற்றுள்ளன. யதார்த்த பாணிக் கதைகளும், விஞ்ஞானப் புனைகதைகளும், மாய யதார்த்தக் கதைகளும்,
பரிசோதனைக் கதை முயற்சிகளும் இவற்றுள் உண்டு.
பொறுப்புணர்வு மிக்க தேர்வும் நம்பகமான மொழிபெயர்ப்பும் இத்தொகுப்பின் சிறப்பம்சங்கள்.
-பிரேம் எழுதிய இந்தக்கதைகள் வழக்கமான கதை கூறும் தன்மையிலிருந்து விலகியவை. பின்நவீனத்துவ இலக்கிய உருவாக்கத்தின் அடிப்படையான கலைத்துப்போடும் விளையாட்டை முன்நிறுத்தும் வடிவத்தைக்கொண்டவை. சிறுகதை, நீள்கதை, குறுநாவல் போன்றஆகிவந்தவடிவங்களுக்கு எதிரான புதிய வடிவத்தையும் புதுவகை எழுத்தையும் இந்தக் கதைகள் கொண்டிருக்கின்றன. தனி மனிதர்களுக்குள்ளிருக்கும் பிராந்திய வரலாற்றையும் பிராந்தியத்திற்குள்ளிருக்கும் தனி மனிதனின் கதையையையும் சுயபுராணம், புனைவு, வரலாறு ஆகிய வடிவங்களில் முன்வைப்பதில் வெற்றியடைந்த படைப்புகள் இவை. வரலாற்றின் அடுக்குகளில் மறைந்திருக்கும் புனைவுக்கான சாத்தியங்களைக் கதையாக்குகிறார் பிரேம். தந்தைக்கும் மகனுக்கும் தந்தைக்கும் மகளுக்குமான உறவுகளின் நுட்பமான பரிமாணங்களை இக்கதைகள் தொடுகின்றன. இந்தக்கதைகளுக்குள் பிரெஞ்சும் புதுவையும் காலத்திலும் வெளியிலும் இணைந்து புதுவகை நிலத்தைத் தரிசிக்கச் செய்கின்றன.
-கருத்துரிமை சார்ந்து பெருமாள்முருகன் எழுதிய இருபத்தேழு
கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். கடந்த ஆறு ஆண்டுகளில்
தமிழ்நாட்டிலும் பிற மாநிலங்களிலும் கருத்துரிமை சார்ந்த பிரச்சினைகள் ஏற்பட்டபோது படைப்பாளர்கள் பக்கம் நின்று எழுதியவை இவை. சல்மான் ருஷ்டி பற்றிய கட்டுரை ஒன்றும் உண்டு. கருத்துரிமை தொடர்பாகப் பல்வேறு கோணங்களில் விவாதிக்க வேண்டிய காலம் இது.
பொதுமனதில் பதிந்துள்ள விழுமியங்கள் பற்றியும் சாதியச் சமூகத்தின் தனித்த இயல்புகள் குறித்தும் இக்கட்டுரைகள் பெரிதும் பேசுகின்றன. சட்டம், தீர்ப்புகள் மட்டுமல்லாமல் பொதுப்புத்தி சார்ந்தும் சாதியத்தைத் தொடர்புபடுத்தியும் கருத்துரிமைப் பிரச்சினைகளை விவாதிக்கும் இந்நூல் கவனத்திற்கும் வாசிப்பிற்கும் விவாதத்திற்கும் உரியது.
-இன்றைய இளைஞர்கள் தம் திறமையை வெளிப்படுத்த ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. அவர்களின் திறமைக்குத் தாய்நாடும் அயல்நாடுகளும் மதிப்புத் தருகின்றன. இந்த வாய்ப்புகளோடு இளந்தலைமுறை முடங்கிவிடுவதை இந்நூலாசிரியர் ஏற்கவில்லை. கல்வியின் மூலம் திறமையைப் பெற்றுக்கொண்டதோடு ஒருவர் திருப்திப்பட்டுவிடக் கூடாது; சமூகப் பொறுப்புணர்வும் அவர்களுக்கு அவசியம்.
சமூகத்துடன் உயிரோட்டமுள்ள முறையில் உறவாடுவதற்கான வழிமுறைகளை அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். தனிமனிதனின் வளர்ச்சி சமூக வளர்ச்சியோடு இணைந்தால்தான் இருதரப்பும் ஒளிர முடியும். அதற்கான வழிமுறைகளை நூலாசிரியர் பலவிதமான சம்பவங்களையும் சிந்தனைகளையும் இணைத்துச் சுவைபடத்
மலைகளின் பேரரசியாய் வீற்றிருக்கும் மாஞ்சோலைப் பகுதியின் வரலாற்றை, இயற்கையை, நூறு ஆண்டுகளில் அங்கு ஏற்பட்டிருக்கும் மாற்றங்களை விறுவிறுப்பாகச் சொல்லும் நூல் இது.
மாஞ்சோலைப் பகுதியில் பிறந்து வளர்ந்த அரசு அமல்ராஜ் தன்னுடைய ஊரைப் பற்றி மண்ணின் வாசத்தோடும் மழையின் தூறலோடும் பேசுகிறார்.
மாஞ்சோலையின் வரலாறு, சூழ்நிலை, மக்கள், வாழ்வியல் ஆகியவை குறித்த முதல் பதிவு இந்த நூல்.