Your cart is empty.
திருடன் மணியன்பிள்ளை
திருடர்களுக்கும் தனிப்பட்ட வாழ்வு உண்டு என்பதை உணர்த்தும் தன்வரலாறு இது.
ஒரு மனிதரின் வாழ்வில் அவர் வளரும் சூழலுக்கு என்ன பங்கு இருக்கிறது, மனிதர் கள் எப்படித் தடம் மாறுகிறார்கள் என்பதை இந்த நூல் அழுத்தமாகக் காட்டுகிறது.
திருடன் என்றாலும் தனக்கும் சில கேட்பாடுகள், உரிமைகள் இருப்பதையும் மணியன்பிள்ளை வெளிப்படுத்துகிறார். இவரது வாழ்வின் பயணத்தில் துரோகத்தின் நிழல் கூடவே வருவதையும் காண முடிகிறது.
கேரளத்தில் நடக்கும் நிகழ்வுகளைக் கேரள எல்லையில் உள்ள நாகர்கோயில் மண்வாசனையுடன் இயல்பான தமிழில் தந்திருக்கிறார் குளச்சல் மு. யூசுஃப். இந்த நூலை மொழிபெயர்த்ததற்காக 2018இல் சாகித்திய அகாதெமியின் மொழிபெயர்ப்பு விருதை இவர் பெற்றுள்ளார்.











