Your cart is empty.
ஸ்ரீகாந்தன்
பிறப்பு: பி. 1953
ஸ்ரீகாந்தன் (பி. 1953)
1920களில் ஆந்திரத்திலிருந்து மலேசியாவுக்குக் கஞ்சிக்கூலிகளாய்ச் சென்ற பெற்றோருக்குப் பிறந்த நான்கு பிள்ளைகளில் நான்காவது பிள்ளை. இயற்பெயர் ஸ்ரீராமுலு. ஜெயகாந்தனின் தாக்கத்தால் ஸ்ரீகாந்தன் என்ற புனைபெயரைச் சூடிக்கொண்டார்.
1970களில் எழுதத் தொடங்கியவர், வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்ளும் பொருட்டு 50 ஆண்டுகள் வாசிப்பை மட்டும் வைத்துக்கொண்டு எழுதுவதை முற்றாக நிறுத்தியிருந்தார். 2022இலிருந்து மீண்டும் தீவிரமாக எழுதத் தொடங்கியிருக்கிறார்.
இவரது சிறுகதைகள் காலச்சுவடு, சொல்வனம், கலகம், வாசகசாலை, கனலி, வனம் (இலங்கை), வல்லினம் (மலேசியா) போன்ற மின்னிதழ்களிலும் தமிழ் மலர், தமிழ் நேசன், தமிழ் முரசு போன்ற மலேசிய ஞாயிறுப் பதிப்புகளிலும் வெளிவந்திருக்கின்றன.
மலேசிய சோசலிசக் கட்சி உறுப்பினர். கோலாலம்பூரில் வசித்துவருகிறார்.
மனைவி: கனகசுந்தரி. பிள்ளைகள்: அரவிந்தன், திவ்யா, சித்தார்த்தன், சாதனா.
