Your cart is empty.
அரவிந்தன்
பிறப்பு: 1964
அரவிந்தன் (பி.1964) இதழாளர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். இதழியல் துறையில் முப்பதாண்டுக் கால அனுபவம்கொண்டவர். இந்தியா டுடே, காலச்சுவடு, சென்னை நம்ம சென்னை, நம் தோழி ஆகிய இதழ்களில் பணியாற்றியுள்ளார். தி இந்து தமிழ் நாளிதழின் இணைப்பிதழ்களின் ஆசிரியராகப் பணியாற்றினார். இலக்கியம், தத்துவம், பெண்ணுரிமை, அரசியல், மொழி, திரைப்படம், கிரிக்கெட் ஆகியவற்றைக் குறித்த கட்டுரைகளை எழுதிவருகிறார். சிறுகதைகள், நாவல், இலக்கிய விமர்சனக் கட்டுரைகள், அரசியல் விமர்சனம், மொழிபெயர்ப்பு, மகாபாரதச் சுருக்கம், திரைப்படம், கிரிக்கெட் குறித்தவையென இதுவரை பதினைந்துக்கும் மேற்பட்ட நூல்கள் வெளியாகியுள்ளன. தற்போது டைம்ஸ் ஆஃப் இந்தியா குழுமத்தின் ‘சமயம் தமிழ்’ என்னும் இணையதளத்தின் ஆசிரியராகப் பணியாற்றிவருகிறார். இதழியல் பயிற்சி வகுப்பு நடத்திய அனுபவமும் இவருக்குண்டு. தற்போது லயோலா கல்லூரியில் வருகைதரு விரிவுரையாளராக இதழியல் மாணவர்களுக்குப் பாடம் எடுத்துவருகிறார். விருதுகள் · தமிழ்ப் புத்தக நண்பர்கள் நடத்தும் மாதாந்தர விமர்சனக் கூட்டத்தில் இமையத்தின் படைப்புகள் குறித்து ஆற்றிய உரைக்கு 2016-17ஆம் ஆண்டுக்கான ‘ஆண்டின் சிறந்த உரை’ விருது. · பால சரஸ்வதி மொழியாக்க நூலுக்கு ‘கனடா இலக்கியத் தோட்டம்’ வழங்கும் ‘சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்கான விருது (2017).’
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
இந்தியாவின் சுருக்கமான வரலாறு
-5,000 ஆண்டுகால இந்திய வரலாறு மிகச் சுருக்கமான வடிவில் இந்தியாவின் பண்டைய
நாகரிகங்களின் இ மேலும்
தி. ஜானகிராமன் நினைவோடை
-தமிழின் முக்கியமான ஆளுமைகள் குறித்த சுந்தர ராமசாமியின்
‘நினைவோடை வரிசையில் ஏழாவது நூல் இ மேலும்
மகாபாரதம்
-பேரரசுகள் உருவாகியிருக்கின்றன, வீழ்ந்திருக்கின்றன; பல்வேறு மதப்
பிரிவுகள், தத்துவப் பார் மேலும்
கர்னாடக இசையின் கதை
இசையுலகத்திற்கு உள்ளும் வெளியிலும் நிகழ்ந்துவரும் பல்வேறு விவாதங்கள், எழுப்பப்படும் கேள்விகள் ஆக மேலும்
மறைக்கப்பட்ட மிருதங்கச் சிற்பிகள்
ஓசையின் மூலாதாரம் யாரிடமிருந்து வருகிறது? உயிருள்ளவர்களும் உயிரற்றவையும் இதில் எப்படி ஒன்றிணைகிறா மேலும்
சாதிக்குப் பாதி நாளா? ராஜாஜியின் கல்வித்திட்டம்
‘குலக்கல்வித் திட்டம்' என்று திராவிட இயக்கம் விமர்சித்த ராஜாஜியின் கல்வித் திட்டம் பற்றிய விரிவான மேலும்
பீமாயணம்
இந்தியாவில் ‘தீண்டத் தகாதவராக’ இருப்பது என்றால் என்ன? இந்தியர்களில் சிலர் பிறரைத் தொடுவதை ஏன் இழ மேலும்
எது நிற்கும்
தமிழ்ச் சமூகத்திடமிருந்து அங்கீகாரமோ ஊக்கமோ கிடைக்காத போதும் பெரும் உத்வேகத்துடனும் படைப்பூக்க மேலும்
எம்.எஸ் :காற்றினிலே கரைந்த துயர்
எம்.எஸ். சுப்புலட்சுமி பற்றி டி.எம். கிருஷ்ணா எழுதிய ஆங்கில கட்டுரை ஒன்று பெரும் விவாதத்துக்கும் மேலும்