Your cart is empty.
திருவாளர் புராணம்
-கவிதைக்கும் பகடிக்கும் மிகுந்த ஏற்புண்டு. பழந்தமிழ் இலக்கிய மரபிலும் இதற்குப் பல சான்றுகளைக் காட்ட முடியும். ‘திருவாளர் புராணம்’ நம் சமூகத்தில் நீக்கமற நிறைந்திருக்கும் அதிகாரத்தைப் பகடி செய்யும் கவிதைகளையும் தீவிரமாக விமர்சிக்கும் கவிதைகளையும் கொண்ட தொகுப்பு.
நாவல், சிறுகதை எனப் புனைவுகளில் இயங்கிவரும் பெருமாள் முருகன் இடையறாது கவிதைகளும் எழுதிவருகிறார். அவர் கவிதைகளின் உரிப்பொருள் பலதரப்பட்டவை. முந்தையவற்றில் இருந்து வேறுபட்ட பொருளில் அமைந்த இக்கவிதைகள் சம்பவங் களாகவும் பாத்திரச் சித்திரிப்புகளாகவும் விரிந்து நிகழ்த்துகலை யின் தன்மை கொண்டுள்ளன. கோபத்தோடும் எள்ளலோடும் வாய்விட்டு வாசிக்கத்தக்க ஓசைநயமும் இவற்றில் இருக்கக் காணலாம்.











