Your cart is empty.
அந்தரத்தில் பறக்கும் கொடி
இலக்கிய விமர்சனம், இலக்கிய ஆளுமைகளுடனான அனுபவ பதிவுகள், இலக்கியம் மற்றும் சமூக நிகழ்வுகள் குறித்த எதிர்வினைகள், ஆளுமைகள் பற்றிய மதிப்பீடுகள் என சுந்தர ராமசாமியின் உரைநடை எழுத்துக்களைப் … மேலும்
வகைமைகள்: விற்பனையில் சிறந்தவை | கிளாசிக் கட்டுரை வரிசை | தமிழ் கிளாசிக் கட்டுரை |
இலக்கிய விமர்சனம், இலக்கிய ஆளுமைகளுடனான அனுபவ பதிவுகள், இலக்கியம் மற்றும் சமூக நிகழ்வுகள் குறித்த எதிர்வினைகள், ஆளுமைகள் பற்றிய மதிப்பீடுகள் என சுந்தர ராமசாமியின் உரைநடை எழுத்துக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொகுப்பு இது. தமிழ்ச் சமூகம் மற்றும் இலக்கியச் சூழல் குறித்த ஆழ்ந்த, கரிசனமிக்க விமர்சனங்கள் லாவகமான மொழியில் உரத்து வெளிப்படும் இக்கட்டுரைகள் தமிழ் இலக்கியச் சூழலில் சு.ராவைத் தனித்து இனங்காட்டுகின்றன. ஏறத்தாழ அரைநூற்றாண்டு காலத் தொடர்ச்சிகொண்ட அவரது கருத்துகளில் வெளிப்படும் நேர்மையும் பிடிப்பும் அவரோடு கருத்தியல் ரீதியாக உடன்பாடு கொள்ளாதவர்களால்கூட மறுதலிக்க இயலாதவை. சீரிய வாசகர்கள் அவசியம் படிக்க வேண்டிய தொகுப்பு இது.
சுந்தர ராமசாமி
சுந்தர ராமசாமி (1931 - 2005) தமிழின் முன்னோடி எழுத்தாளர்களில் ஒருவரான சுந்தர ராமசாமி நாகர்கோவிலில் பிறந்தார். பள்ளியில் மலையாளமும் ஆங்கிலமும் சமஸ்கிருதமும் கற்றார். 1951இல் ‘தோட்டி யின் மக’னைத் தமிழில் மொழிபெயர்த்ததே முதல் இலக்கியப் பணி. 1951இல் புதுமைப்பித்தன் நினைவு மலரை வெளியிட்டார். இவரது முதல் கதையான ‘முதலும் முடிவும்’ அதில் இடம் பெற்றது. மூன்று நாவல்களும் பல கட்டுரைகளும் சுமார் 60 சிறுகதைகளும், பசுவய்யா என்ற பெயரில் கவிதைகளும் எழுதினார். 1988இல் காலச்சுவடு இதழை நிறுவினார். சுந்தர ராமசாமிக்கு டொரொன்டோ (கனடா) பல்கலைக்கழகம் வாழ்நாள் இலக்கியச் சாதனைக்கான ‘இயல்’ விருதை (2001) வழங்கியது. வாழ்நாள் இலக்கியப் பணிக்காகக் ‘கதா சூடாமணி’ விருதையும் (2003) பெற்றார். சுந்தர ராமசாமி 14.10.2005 அன்று அமெரிக்காவில் காலமானார்.
ISBN : 9789384641054
SIZE : 14.0 X 1.3 X 21.3 cm
WEIGHT : 314.0 grams
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
மறியா தாமுவுக்கு எழுதிய கடிதம்
-கடந்த சில ஆண்டுகளில் சு.ரா. எழுதிய 12 கதைகளின் தொகுப்பு இந்நூல்.
சு.ரா.வின் புனைவுலகம் அ மேலும்