Your cart is empty.
கருமிளகுக் கொடி
டாக்டர் வி. சந்திரசேகர ராவின் ‘கருமிளகுக் கொடி’ … மேலும்
மொழிபெயர்ப்பாளர்: க. மாரியப்பன் |
வகைமைகள்: புதிய வெளியீடுகள் | நாவல் |
டாக்டர் வி. சந்திரசேகர ராவின் ‘கருமிளகுக் கொடி’ தலித் வாழ்வை மாறுபட்ட பார்வைக் கோணத்தில், வித்தியாசமான முறையில் கூறும் நாவல்.
தலித்துகள் தமக்கான விடுதலையைப்பெற எதிரிகளுடன் போராடுவதற்கு முன், குடும்ப அமைப்பிலுள்ள அதிகாரத்தையும் இறுக்கத்தையும் உடைத்தாக வேண்டிய நிர்ப்பந்தத்தைக் கவனப்படுத்தும் நாவல் இது.
தமிழுக்குப் புதிய குரல்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்னும் முனைப்புடன் செயலாற்றிவரும் க. மாரியப்பன் இதைச் சிறந்த முறையில் தமிழில் தந்துள்ளார்.
ISBN : 9788119034765
SIZE : 14.0 X 1.0 X 21.0 cm
WEIGHT : 220.0 grams
ந. பெரியசாமி
6 Nov 2024
கருமிளகுக்கொடி நாவல் பற்றிய பார்வை
https://www.facebook.com/share/p/2FFHcFbySyVvM7Dk
ஆந்திராவில் உயிர்ப்போடு இயங்கிய ' மாதிகா தண்டோரா இயக்கத்தின்' செயல்பாடுகளை கொண்டு அன்றைய சூழலின் வாழ்வைக் கொண்டு எழுதப்பட்டிருக்கிறது டாக்டர்.வி. சந்திரசேகர ராவின் " கருமிளகுக் கொடி" நாவல். சலிப்படையாத வாசிப்பை தந்தபடி இருக்கிறது க.மாரியப்பன் மொழி.














