Your cart is empty.
ஆனைவாரியும் பொன்குருசும்
வைக்கம் முகம்மது பஷீர் என்ற படைப்பாளுமையின் இருவேறு முகத் தோற்றங்களைக் காட்டுகிறது இந்நூல். ‘ஆனைவாரியும் பொன்குருசும்’ என்ற நெடுங்கதையும் ‘செவிசாய்த்துக் கேளுங்கள் அந்திமப் பேரோசை’ என்ற நீண்ட … மேலும்
வகைமைகள்: விற்பனையில் சிறந்தவை | விருதுபெற்ற எழுத்தாளர் | மொழிபெயர்ப்பு குறுநாவல் |
வைக்கம் முகம்மது பஷீர் என்ற படைப்பாளுமையின் இருவேறு முகத் தோற்றங்களைக் காட்டுகிறது இந்நூல். ‘ஆனைவாரியும் பொன்குருசும்’ என்ற நெடுங்கதையும் ‘செவிசாய்த்துக் கேளுங்கள் அந்திமப் பேரோசை’ என்ற நீண்ட உரையும் இதில் இடம்பெற்றுள்ளன. பஷீர் கதைகளில் மிகவும் விநோதமும் தீவிர நகைச்சுவையும் கொண்ட கதை இது. பஷீர் நிகழ்த்திய சொற்பொழிவுகளில் மிகவும் நீண்டதும் தீர்க்கமானதுமான உரை இது. கதையில் ஊடாடும் கட்டுரைத்தன்மையும் உரையில் பளிச்சிடும் கதைக் கூறுகளும் இவற்றை ஒன்றிணைத்துப் பார்க்க உதவுகின்றன. அவை பஷீர் என்ற ஆகச் சிறந்த கதைசொல்லியின் ஆற்றலை அடையாளம் காட்டுகின்றன. இன்றும் புதுமை கலையாத கதை; இன்றைக்கும் பொருந்தக்கூடிய உரை.
வைக்கம் முகம்மது பஷீர்
வைக்கம் முகம்மது பஷீர் (1908 - 1994) 1908 ஜனவரி 19ஆம் தேதி கேரளா வைக்கம் தாலுகாவில் தலையோலப் பரம்பில் பிறந்தார். பத்தாம் வகுப்பு படிக்கும்போது வீட்டைவிட்டு ஓடி, இந்திய தேசியக் காங்கிரஸில் சேர்ந்து உப்பு சத்தியாக்கிரகத்தில் கலந்துகொண்டார். சுதந்திரப் போராட்ட வீரராக சென்னை, கோழிக்கோடு, கோட்டயம், கொல்லம், திருவனந்தபுரம் சிறைகளில் தண்டனை அனுபவித்தார். பகத்சிங் பாணியிலான தீவிரவாத அமைப்பொன்றை உருவாக்கிச் செயல்பட்டார். அமைப்பின் கொள்கை இதழாக ‘உஜ்ஜீவனம்’ வார இதழையும் தொடங்கினார். பத்தாண்டுகள் இந்தியாவெங்கும் தேசாந்திரியாகத் திரிந்தார். பிறகு ஆப்பிரிக்காவிலும் அரேபியாவிலும் சுற்றினார். இக்காலகட்டத்தில் பஷீர் செய்யாத வேலைகளே இல்லை. ஐந்தாறு வருடங்கள் இமயமலைச் சரிவுகளிலும் கங்கையாற்றின் கரைகளிலும் இந்து துறவியாகவும் இஸ்லாமிய சூஃபியாகவும் வாழ்ந்தார். சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கான மத்திய, மாநில அரசுகளின் ஓய்வூதியம், சிறப்பு நல்கை, இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது, கோழிக்கோடு பல்கலைக்கழகத்தின் டி.லிட்., சம்ஸ்கார தீபம் விருது, பிரேம் நசீர் விருது, லலிதாம்பிகா அந்தர்ஜனம் விருது, முட்டத்து வர்க்கி விருது, வள்ளத்தோள் விருது, ஜித்தா அரங்கு விருது போன்ற பல்வேறு விருதுகள் பெற்றவர். 1994 ஜூலை 5ஆம் தேதி காலமானார். மனைவி: ஃபாபி பஷீர், மக்கள் : ஷாஹினா, அனீஸ் பஷீர்.
ISBN : 9789380240770
SIZE : 14.0 X 0.5 X 21.5 cm
WEIGHT : 93.0 grams
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
மறியா தாமுவுக்கு எழுதிய கடிதம்
-கடந்த சில ஆண்டுகளில் சு.ரா. எழுதிய 12 கதைகளின் தொகுப்பு இந்நூல்.
சு.ரா.வின் புனைவுலகம் அ மேலும்