Your cart is empty.
அம்மா ஒரு கொலை செய்தாள்
அம்பை பரந்த நோக்கமும் கூர்மையான வெளிப்பாடும் வலுவான தீர்மானங்களும் கொண்டவர். பெருமிதம் கொள்ளத்தக்க தனித்துவமானவர். நிராகரிக்க முடியாதபடி தன்னைப் பரிபூரணமாக அர்ப்பணித்தவர். வாசிப்பவரை ஆழநேசித்து வலுப்படுத்தும் சக்தியைக் … மேலும்
வகைமைகள்: விற்பனையில் சிறந்தவை | விருதுபெற்ற எழுத்தாளர் | தமிழ் கிளாசிக் சிறுகதை |
அம்பை பரந்த நோக்கமும் கூர்மையான வெளிப்பாடும் வலுவான தீர்மானங்களும் கொண்டவர். பெருமிதம் கொள்ளத்தக்க தனித்துவமானவர். நிராகரிக்க முடியாதபடி தன்னைப் பரிபூரணமாக அர்ப்பணித்தவர். வாசிப்பவரை ஆழநேசித்து வலுப்படுத்தும் சக்தியைக் கொண்டிருக்கும் அம்பையின் கதைகள் பெண்ணானவள் கொல்லப்படுகிற ரணங்களிலிருந்து மீண்டெழுந்து சொல்லப்பட்டவை. முன்னுரையில் அனார்
அம்பை
அம்பை (பி. 1944) இயற்பெயர் டாக்டர் சி.எஸ். லக்ஷ்மி. வரலாற்றாசிரியர்; புது தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். நாற்பது ஆண்டுகளாகப் பெண்கள் வரலாறு, வாழ்க்கை பற்றிய ஆய்வில் ஈடுபட்டிருப்பவர். பெண் எழுத்தாளர்கள், பெண் இசைக் கலைஞர்கள், பெண் நடனக் கலைஞர்கள் குறித்து இவர் மேற்கொண்ட ஆய்வுகள் ‘The Face Behind the Mask’, ‘The Singer and the Song’, ‘Mirrors and Gestures’ என்னும் புத்தகங்களாக வெளிவந்துள்ளன. சிறுகதைத் தொகுதிகள் ‘சிறகுகள் முறியும்’ (1976), ‘வீட்டின் மூலையில் ஒரு சமையலறை’ (1988), ‘காட்டில் ஒரு மான்’ (2000), ‘வற்றும் ஏரியின் மீன்கள்’ (2007), ‘ஒரு கறுப்புச் சிலந்தியுடன் ஓர் இரவு’ (2013), அந்தேரி மேம்பாலத்தில் ஒரு சந்திப்பு (2014). இவரின் கதைகள் ஆங்கிலத்தில் ‘A Purple Sea’, ‘In a Forest, A Deer’, ‘Fish in a Dwindling Lake’, A Night With a Black Spider, A Meeting On the Andheri Over Bridge என ஐந்து தொகுதிகளாக மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட இரோம் ஷர்மிலாவின் ‘Fragrance of Peace’ கவிதைத் தொகுப்பைத் தமிழில் ‘அமைதியின் நறுமணம்’ (2010) என மொழிபெயர்த்திருக்கிறார். விளக்கு அமைப்பின் புதுமைப்பித்தன் விருது (2005), டொரான்டோ பல்கலைக்கழக தமிழ் இலக்கியத் தோட்டத்தின் வாழ்நாள் இலக்கிய விருது (2008), தமிழக அரசின் கலைஞர் மு. கருணாநிதி பொற்கிழி (2011), சென்னைப் பல்கலைக்கழகத்தின் இலக்கியத்தில் உன்னதத்திற்கான விருது (2011) முதலானவற்றைப் பெற்றிருக்கிறார். SPARROW (Sound & Picture Archives for Research on Women) என்னும் பெண்கள் ஆவணக் காப்பகத்தை மும்பையில் 1988இல் நிறுவி அதன் இயக்குநராகச் செயல்பட்டுவருகிறார்.
ISBN : 9789352440801
SIZE : 13.9 X 1.4 X 21.5 cm
WEIGHT : 320.0 grams
Ambai is an unique tamil writer with clarity in expression, vast perspectives and strong convictions. Poet Anaar praises her as a writer to be proud of. Ambai’s voice is the voice of women killed and resurrected. A reader can find love and hope, even on their most desperate times in Ambai’s stories. From Ambai’s vast collection of short stories, Anaar has has chosen and collected into an analogy what will be remembered as classics.
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
மறியா தாமுவுக்கு எழுதிய கடிதம்
-கடந்த சில ஆண்டுகளில் சு.ரா. எழுதிய 12 கதைகளின் தொகுப்பு இந்நூல்.
சு.ரா.வின் புனைவுலகம் அ மேலும்














