எப்போதுமே பஷீரின் உலகம் வேறு. நம்மைத் தீண்டிய தென்றல்தான் அவரையும் தீண்டுகிறது. ஆனாலும் அது அவரிடம் கொண்ட உறவு வேறு. நாம் பேசிய சொற்களும் அவர் பேசிய …
மேலும்
எப்போதுமே பஷீரின் உலகம் வேறு. நம்மைத் தீண்டிய தென்றல்தான் அவரையும் தீண்டுகிறது. ஆனாலும் அது அவரிடம் கொண்ட உறவு வேறு. நாம் பேசிய சொற்களும் அவர் பேசிய சொற்களும் ஒன்றே என்றாலும், அது அவரிடம் தந்த பொருள் வேறு. அதனால்தான் யதார்த்த வாழ்வை அவர் எழுதியபோது அவரது படைப்புகள் மண்ணின் வாசனையோடு மனதின் மொழியையும் ஆன்ம உலகையும் பிணைத்துக்கொண்டன. நாம் கண்ட அனுபவங்களின் அக உலகுக்குள் செல்ல அவருக்குக் கிடைத்த சிறகுகளே. அவர் படைப்புகளைப் பொலியச் செய்தன. ஒரே வெளி. ஒரே வாழ்வு என்றாலும் கலை எதன்பொருட்டு ஆன்ம ஒளியாக மாறுகிறது என்பதற்கான உரைகல்லே இக்கதைகள்.