Your cart is empty.
அட்சரேகை (இ-புத்தகம்)
அட்சரேகை கானலை நதி என்று நினைத்து நீந்தியவர்கள், அவர்களை ஆதரிசமெனக் கொண்டு நீந்த இறங்கியவர்களின் கதைகளும் கிளைக்கதைகளுமாக விரிகிறது கார்த்திக் பாலசுப்ரமணியனின் அட்சரேகை. இதில் இளமைக்கே உரிய … மேலும்
அட்சரேகை கானலை நதி என்று நினைத்து நீந்தியவர்கள், அவர்களை ஆதரிசமெனக் கொண்டு நீந்த இறங்கியவர்களின் கதைகளும் கிளைக்கதைகளுமாக விரிகிறது கார்த்திக் பாலசுப்ரமணியனின் அட்சரேகை. இதில் இளமைக்கே உரிய வழக்கமான இலட்சியங்கள் பொருளிழக்கின்றன; அவற்றை நோக்கி நடையாய் நடந்த பாதை களிலும் ஒளி அவிந்துவிடுகிறது. பின் மிஞ்சுவது நினைவுகள் மட்டுமே. நினைவுகளில் செதுக்கிவைத்திருப்பவர்கள் புனைவின் கடைசிப் பக்கம் வரையிலும் உயிர்ப்புடன் வருகிறார்கள். ஏதேதோ திசைகளிலிருந்து, எதிர்பாராத திருப்பங்களிலிருந்து, சிலர் மறைந்த பின்னும், ஏன் செத்த பின்னும்தான். நினைவுகளோடு கலந்துவரும் பல்வேறு இடவெளிகளின் குவிமையமாகிறது ஒரு சிறிய அறை. அரசு வேலைகளுக்கான தேர்வுகளுக்குப் படிப்பவர்களுக்கு அவர்களது போராட்டங்களின், வீழ்ச்சிகளின், காயங்களின் சாட்சியாக இருக்கும் அறை. கதையை நகர்த்திச் செல்லும் சமூக, பொருளாதார வரலாறுகளை அந்த அறை பார்க்கிறது. அதன் கண்களோடு வாசகர் தன் கண்களைச் சேர்த்து இமைக்கக் கேட்கிறது. கார்த்திக்குக்கு அநாயாசமாய் வசப்பட்டிருக்கும் யதார்த்த அழகியலோடு கூடவே சிதறுண்ட உணர்வுகளின் வண்ணங்களும் துல்லியமான விவரணைகளும் கதாபாத்திரங்கள் அடையும் பரிணாமங்களும் நாவலின் வலுப்புள்ளிகள். வாசகரை அவை பிரதிக்குள் இழுத்துப்போடுகின்றன.
ISBN : 9789355234537
PAGES : 0
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
அட்சரேகை
-அட்சரேகை
கானலை நதி என்று நினைத்து நீந்தியவர்கள், அவர்களை ஆதரிசமெனக் கொண்டு நீந்த இறங்கிய மேலும்
தரூக் (இ-புத்தகம்)
ஆஸ்திரேலியாவைக் களமாகக் கொண்டு இடப்பெயர்வு- - குடியேற்ற அரசியலைப் பேசுகிறது இந்த நாவல். 300 ஆண்டு மேலும்




