Your cart is empty.
கவர்ன்மென்ட் பிராமணன்
இந்த உலகில் வதைப்பவனும் மனிதன், வதைபடுவதும் மனிதன். தன்னைப் போன்றவனே இவன் என்னும் எண்ணமின்றிக் கருணையில்லாமல் எதற்காக ஒருவன் இன்னொருவனை வதைக்க விரும்புகிறான்? ஒருவன் வதையில் இன்னொருவன் … மேலும்
வகைமைகள்: விற்பனையில் சிறந்தவை | இந்திய கிளாசிக் வாழ்க்கை வரலாறு | வரலாறு |
இந்த உலகில் வதைப்பவனும் மனிதன், வதைபடுவதும் மனிதன். தன்னைப் போன்றவனே இவன் என்னும் எண்ணமின்றிக் கருணையில்லாமல் எதற்காக ஒருவன் இன்னொருவனை வதைக்க விரும்புகிறான்? ஒருவன் வதையில் இன்னொருவன் காணத்தக்க ஆனந்தம் என்ன? காலம் காலமாகச் சாதியின் காரணமாக வதையுறச் செய்யும் காரியங்களுக்கு என்ன காரணம் சொல்ல முடியும்? வெறியா? அகங்காரமா? வெறுப்பா? கசப்பா? ஆத்திரமா? சீற்றமா? எரிச்சலா? எது இவர்களைத் தூண்டுகிறது? எது இவர்களுக்குத் தைரியத்தைக் கொடுக்கிறது? ஒரு பிறப்பையே கேவலம் என்று ஏளனம் செய்ய இவர்கள் யார்? பல நூற்றாண்டுகளாக நிகழ்ந்த கொடுமைகளின் விளைவாக, சமூகத்தின் உடல் முழுக்கக் காய்ப்பேறிய தழும்புகள் மட்டுமே உள்ளன. ஒரே ஒரு அங்குலம்கூட அதன் உடல் பகுதி வெளியே தெரியாதபடி எங்கெங்கும் தழும்புகள். அரவிந்த மாளகத்தியின் எழுத்துகளில் இத்தகு தழும்புகளையே நாம் காண்கிறோம். எழுத்தும் படிப்பும் கைவரப் பெற்ற ஒருவரின் குறிப்புகளே இந்த அளவுக்கு நமக்குத் தலைகுனிவையும் நாணத்தையும் உண்டாக்கவல்லன எனில், படிப்பும் எழுத்தும் அறியாத பாமர ஜனங்கள் வாய்திறந்து பேசத் தொடங்கினால் நம் முகத்தை எங்கே போய் வைத்துக்கொள்வது என்றே தெரியவில்லை.
ISBN : 9789384641290
SIZE : 14.0 X 0.8 X 21.2 cm
WEIGHT : 192.0 grams
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
இந்தியாவின் சுருக்கமான வரலாறு
-5,000 ஆண்டுகால இந்திய வரலாறு மிகச் சுருக்கமான வடிவில் இந்தியாவின் பண்டைய
நாகரிகங்களின் இ மேலும்
ஏழு போராளிகள்!
-இந்திய நாட்டின் விடுதலைக்காகப் பாடுபட்ட ஏழு அயல்நாட்டவரின் கதைகளை இந்நூல்
சொல்கிறது. மேல மேலும்