Your cart is empty.
ஐந்நூறு கோப்பைத் தட்டுகள்
தமிழின் தலைசிறந்த படைப்பாளிகளில் ஒருவரான அசோகமித்திரன் சிறுகதைகளின் வீச்சையும் பன்முகத் தன்மைகளையும் உணர்த்தும் கதைகள் இந்தத் தொகுப்பில் உள்ளன. அதிராத குரலில், எளிய மொழியில், அங்கதத் தன்மையுடனும் … மேலும்
வகைமைகள்: விற்பனையில் சிறந்தவை | விருதுபெற்ற எழுத்தாளர் | தமிழ் கிளாசிக் சிறுகதை | நவீனத் தமிழ் கிளாசிக் சிறுகதை |
தமிழின் தலைசிறந்த படைப்பாளிகளில் ஒருவரான அசோகமித்திரன் சிறுகதைகளின் வீச்சையும் பன்முகத் தன்மைகளையும் உணர்த்தும் கதைகள் இந்தத் தொகுப்பில் உள்ளன. அதிராத குரலில், எளிய மொழியில், அங்கதத் தன்மையுடனும் உளவியல் பார்வையுடனும் நுட்பமான தத்துவார்த்த நோக்குடனும் வாழ்வின் பதிவுகளைக் கலையாக மாற்றும் கதைகள் இவை. பெண்கள், குழந்தைகள், தொழிலாளிகள், திரைப்பட உலகைச் சேர்ந்தவர்கள், எழுத்தாளர்கள், பேய்கள், படுகொலைகள், சன்னியாசிகள் என்று பல அம்சங்களைக்கொண்ட அசோகமித்திரனின் சிறுகதை உலகின் சாராம்சத்தை இக்கதைகள் உணர்த்துகின்றன. சுமார் 190 சிறுகதைகள் எழுதியிருக்கும் அசோகமித்திரனின் சிறுகதைகளுக்குச் சிறந்ததொரு அறிமுகம் இந்தத் தொகுப்பு.
அசோகமித்திரன்
அசோகமித்திரன் (1931-2017) இயற்பெயர் ஜ. தியாகராஜன். செகந்தராபாத்தில் பிறந்தார். மெஹ்பூப் கல்லூரியிலும் நிஜாம் கல்லூரியிலும் ஆங்கிலம், இயற்பியல், வேதியியல் படித்தார். தந்தையின் மறைவுக்குப்பின் இருபத்தொன்றாம் வயதில் குடும்பத்துடன் சென்னைக்குக் குடியேறினார். கணையாழி மாத இதழின் ஆசிரியராக பல ஆண்டுகள் பணியாற்றினார். 1951 முதல் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதினார். சிறுகதை, குறுநாவல், நாவல், கட்டுரை, விமர்சனம், சுய அனுபவப் பதிவு போன்ற பிரிவுகளில் 60 நூல்களுக்கு மேல் எழுதியிருக்கிறார். பல இந்திய மொழிகளிலும் சில ஐரோப்பிய மொழிகளிலும் இவரது நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. 1973இல் அமெரிக்காவின் அயோவா பல்கலைக்கழகத்தின் எழுத்தாளர்களுக்கான சிறப்புப் பயிலரங்கில் கலந்துகொண்டவர். 1996ஆம் ஆண்டு சாகித்திய அக்காதெமி விருது பெற்றார். அசோகமித்திரன் தனது 85வது வயதில், 23.03.2017 அன்று சென்னை வேளச்சேரியில் காலமானார். மனைவி: ராஜேஸ்வரி. மகன்கள்: தி. ரவிசங்கர், தி. முத்துக்குமார், தி. ராமகிருஷ்ணன்.
ISBN : 9788189359942
SIZE : 13.7 X 1.2 X 21.5 cm
WEIGHT : 314.0 grams
These stories by Ashokamitran, one of Tamil’s best writers, are told in a soft voice and simple language with subtle humour and psychological view. Women, children, labourers, persons of film world, writers, ghosts, murderers, mendicants all form part of his stories and show the essence of the world.
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
மறியா தாமுவுக்கு எழுதிய கடிதம்
-கடந்த சில ஆண்டுகளில் சு.ரா. எழுதிய 12 கதைகளின் தொகுப்பு இந்நூல்.
சு.ரா.வின் புனைவுலகம் அ மேலும்














