Your cart is empty.
இஸ்தான்புல்: நிலவறைக் கைதிகளின் நினைவுக் குறிப்புகள்
-சித்திரவதை மையத்தின் நிலவறைச் சிறைகளிலிலுள்ள நான்கு கைதிகளின் கதை இது. சித்திரவதைக்கு … மேலும்
மொழிபெயர்ப்பாளர்: முடவன் குட்டி முகம்மது அலி |
வகைமைகள்: புதிய வெளியீடுகள் |
-சித்திரவதை மையத்தின் நிலவறைச் சிறைகளிலிலுள்ள நான்கு கைதிகளின் கதை இது. சித்திரவதைக்கு உட்படுத்தப்படாத சமயங்களில் இஸ்தான்புல் பற்றிய கதைகளை அவர்கள் தங்களிடையே சொல்லிக்கொள்கிறார்கள். கதை, நிலவறையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாய் மேலே நிலப்பரப்பிற்குத் திரும்புகிறது. மனிதர்களை மையமாகக் கொண்டு நகரும் நாவல் பின்னர் இஸ்தான்புல் நகரின் மீது கவனம் கொள்கிறது. துன்பமோ நம்பிக்கையோ இஸ்தான்புல்லில் இருக்கும் அளவு நிலவறைச் சிறைகளிலும் உள்ளன.
அரசியல் சார்புடையதாகத் தோன்றும் ஒரு நாவல் உண்மையில் காதலைப் பற்றியதாக இருக்கிறது; தனி மனிதர்களின் கதைகளில் முழுமையான ஈடுபாடு கொண்டதாகத் தோன்றும் நாவல் உண்மையில் இஸ்தான்புல் நகரைப் பற்றியதாக இருக்கிறது. இஸ்தான்புல் பற்றிய வழக்கமான நாவல்கள், இறந்தகாலம் எதிர்காலம் எனப் பிரித்துக் காலத்தைச் சித்திரிக்கையில், புர்ஹான் ஸென்மெஸின் இந்த நாவலோ “நிலப்பரப்பிற்குக் கீழே - நிலப்பரப்பிற்கு மேலே" எனக் காலத்தைப் பதிவு செய்கிறது. காலத்திற்கும் இடத்திற்கும் இடையேயான இணைவிலிருந்தும் இறுக்கத்திலிருந்தும் நாவல் தனது ஆற்றலைப் பெறுகிறது. கீழே நிலவறையில் ஒன்று, மேலே நிலப்பரப்பில் ஒன்று என இரண்டு இஸ்தான்புல்கள் உள்ளன. எனினும் இரண்டும் உண்மையில் ஒன்றுதான் என்பது மிகவும் முக்கியமானது.
ISBN : 9789355231765
SIZE : 15.0 X 1.6 X 23.1 cm
WEIGHT : 285.0 grams