Your cart is empty.
கொட்டுமேளம்
முதல் தொகுப்பிலேயே பிரமிக்கவைத்த படைப்பாளிகளில் தி. ஜானகிராமனுக்குத் தனி
இடம் உண்டு. ஏறத்தாழ 30 ஆண்டுக் காலப் படைப்புப் பயணத்தில் அவர் எண்ணற்ற
சாதனைகள் புரிந்தாலும் அந்தச் … மேலும்
வகைமைகள்: விற்பனையில் சிறந்தவை | விருதுபெற்ற எழுத்தாளர் | முதல் சிறுகதைத் தொகுதி |
முதல் தொகுப்பிலேயே பிரமிக்கவைத்த படைப்பாளிகளில் தி. ஜானகிராமனுக்குத் தனி
இடம் உண்டு. ஏறத்தாழ 30 ஆண்டுக் காலப் படைப்புப் பயணத்தில் அவர் எண்ணற்ற
சாதனைகள் புரிந்தாலும் அந்தச் சாதனைகளின் வெளிச்சமோ காலத்தின் ஓட்டமோ
அவருடைய முதல் தொகுப்பை எந்த வகையிலும் மங்கச் செய்துவிடவில்லை. சரளமான
கதையோட்டம், இயல்பானதும் சுவையானதுமான உரையாடல்கள், நேர்த்தியான
பாத்திர வார்ப்புகள், வாழ்வின் மகத்தான தருணங்களை இயல்பாக வெளிப்படுத்தும்
படைப்பாக்கம், வாழ்வின்மீதும் மனிதர்கள்மீதுமான தீராத வியப்பை வெளிப்படுத்தும்
தொனி, யார்மீதும் எதன் மீதும் தீர்ப்பெழுதாத பக்குவம் முதலான சிறப்புக் கூறுகள்
அனைத்தும் அவருக்கு எடுத்த எடுப்பிலேயே வசப்பட்டுவிட்டதை அவருடைய முதல்
தொகுப்பு காட்டுகிறது. முதல் தொகுப்பிலேயே சிறுகதைக் கலை அவருக்கு முழுமையாக
வசப்பட்டிருந்ததற்கான சான்றாகவும் இது திகழ்கிறது.
தி. ஜானகிராமன்
தி. ஜானகிராமன் (1921-1982) தி. ஜானகிராமன் தஞ்சை மாவட்டம் மன்னார்குடியை அடுத்த தேவங்குடியில் பிறந்தவர். பத்து வருடங்கள் பள்ளியாசிரியராகப் பணியாற்றியவர். பின்பு அகில இந்திய வானொலியில் பணியாற்றி ஓய்வுபெற்றார். கர்நாடக இசை அறிவும் வடமொழிப் புலமையும் பெற்றிருந்தவர். 1943இல் எழுதத் தொடங்கிய தி. ஜானகிராமன், ‘மோக முள்’, ‘அம்மா வந்தாள்’, ‘மரப்பசு’ உள்ளிட்ட ஒன்பது நாவல்கள், நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், மூன்று நாடகங்கள், பயண நூல்கள் ஆகியவற்றை எழுதினார். சிட்டியுடன் இணைந்து எழுதிய ‘நடந்தாய் வாழி காவேரி’ பயண இலக்கிய வகையில் முக்கியமான நூலாகக் கருதப்படுகிறது. ‘மோக முள்’, ‘நாலு வேலி நிலம்’ ஆகியன திரைப்படமாக்கப்பட்டுள்ளன. ‘மோக முள்’, ‘மரப்பசு’, ‘அம்மா வந்தாள்’ ஆகிய நாவல்களும் பல சிறுகதைகளும் இந்திய, ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. 1979இல் ‘சக்தி வைத்தியம்’ சிறுகதைத் தொகுப்பிற்கு சாகித்திய அக்காதெமி விருது வழங்கப்பட்டது.
ISBN : 9789381969953
SIZE : 13.8 X 1.0 X 21.5 cm
WEIGHT : 217.0 grams
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
மறியா தாமுவுக்கு எழுதிய கடிதம்
-கடந்த சில ஆண்டுகளில் சு.ரா. எழுதிய 12 கதைகளின் தொகுப்பு இந்நூல்.
சு.ரா.வின் புனைவுலகம் அ மேலும்