Your cart is empty.
குழந்தைகள் பெண்கள் ஆண்கள்
சுந்தரராமசாமி தமது அரை நூற்றாண்டு காலத்துக்கும் மேற்பட்ட இலக்கிய வாழ்வில் மூன்று நாவல்களைப்படைத்துள்ளார். அவை மூன்றும் அதனதன் வழியில் முக்கியமானவை; பொருள்சார்ந்து தனித்துவமானவை.‘ஒரு புளியமரத்தின் கதை’ ஓர் … மேலும்
சுந்தரராமசாமி தமது அரை நூற்றாண்டு காலத்துக்கும் மேற்பட்ட இலக்கிய வாழ்வில் மூன்று நாவல்களைப்படைத்துள்ளார். அவை மூன்றும் அதனதன் வழியில் முக்கியமானவை; பொருள்சார்ந்து தனித்துவமானவை.‘ஒரு புளியமரத்தின் கதை’ ஓர் இடத்தின் கதை. ‘ஜே.ஜே: சில குறிப்புகள்’ காலத்தின் மீதானவிமர்சனம். ‘குழந்தைகள் பெண்கள் ஆண்கள்’ மனித உறவுகளின் மாண்பை வியக்கும் படைப்பு.இந்தத் தனித்துவமே இந்நாவல்களைக் காலத்தை விஞ்சிய ஆக்கங்களாக நிலைநிறுத்துகிறது.•சு.ரா.வின்நாவல்களில் அபூர்வமான எளிமையும் இயல்பான அழகும் மிளிரும் நாவல் ‘குழந்தைகள் பெண்கள்ஆண்கள்’. லக்ஷ்மி ஹோம்ஸ்ட்ரோம் மொழிபெயர்ப்பில் வெளிவந்த இந்நாவலின் ஆங்கில ஆக்கம்2014ஆம் ஆண்டுக்கான கிராஸ்வேர்டு பரிசைப் பெற்றது.
சுந்தர ராமசாமி
சுந்தர ராமசாமி (1931 - 2005) தமிழின் முன்னோடி எழுத்தாளர்களில் ஒருவரான சுந்தர ராமசாமி நாகர்கோவிலில் பிறந்தார். பள்ளியில் மலையாளமும் ஆங்கிலமும் சமஸ்கிருதமும் கற்றார். 1951இல் ‘தோட்டி யின் மக’னைத் தமிழில் மொழிபெயர்த்ததே முதல் இலக்கியப் பணி. 1951இல் புதுமைப்பித்தன் நினைவு மலரை வெளியிட்டார். இவரது முதல் கதையான ‘முதலும் முடிவும்’ அதில் இடம் பெற்றது. மூன்று நாவல்களும் பல கட்டுரைகளும் சுமார் 60 சிறுகதைகளும், பசுவய்யா என்ற பெயரில் கவிதைகளும் எழுதினார். 1988இல் காலச்சுவடு இதழை நிறுவினார். சுந்தர ராமசாமிக்கு டொரொன்டோ (கனடா) பல்கலைக்கழகம் வாழ்நாள் இலக்கியச் சாதனைக்கான ‘இயல்’ விருதை (2001) வழங்கியது. வாழ்நாள் இலக்கியப் பணிக்காகக் ‘கதா சூடாமணி’ விருதையும் (2003) பெற்றார். சுந்தர ராமசாமி 14.10.2005 அன்று அமெரிக்காவில் காலமானார்.
ISBN : 9788190080156
SIZE : 14.1 X 3.3 X 21.5 cm
WEIGHT : 728.0 grams
In his literary tenure spanning over half a century, Sundara Ramaswamy authored three novels. Each of them is important and groundbreaking in its own, unique way. 'Oru Puliyamarathi Kathai' is a story about a place. 'J.J.: Sila Kuripugal' is a critique of that time period. ' Kuzhanthiagal, Pengal, Aangal' is a work that marvels at the nature of human relationships. It is this uniqueness that makes these novels timeless. - The novel 'Children, Women, and Men', shines with the rare simplicity and natural beauty of Sura's novels. The English version of the novel, translated by Lakshmi Holmstrom, won the Crossword Prize 2014.
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
ராணி வேலு நாச்சியார் - சிவகங்கையின் சாகச அரசி
-பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆற்காட்டின் பிரதான மாகாணங்களை
நவாப்கள் தங்கள் கட்ட மேலும்














