Your cart is empty.
நாக மண்டலம்
ஒரு பெண், மேலும்
ஒரு பெண், அவள் கணவன், ஒரு பாம்பு. இந்த மூன்று கதாபாத்திரங்களையும் சுற்றிப் பின்னப்பட்டுள்ள வசீகரமான புதிர்தான் கிரீஷ் கார்னாடின் நாக மண்டலம். பெண்ணின் கற்பு என்னும் கற்பிதத்தைக் கேள்விக்குள்ளாக்கும் இந்த நாடகப் பிரதி பெண்ணின் பாலுறவுத் தேர்வு குறித்த நுட்பமான அவதானிப்புகளை முன்வைக்கிறது.
கார்னாட் இந்தக் கதையை நேரிடையாகச் சொல்லவில்லை. ஒவ்வொரு நாள் இரவும் ஒவ்வொரு வீட்டிலும் மனிதர்கள் படுக்கச் செல்வதற்கு முன் தீபங்களை அணைப்பார்கள். அதன் பிறகு அந்த தீபங்கள் தத்தமது வீடுகளை விட்டு வெளியேறி ஊருக்கு வெளியே ஒன்றுகூடித் தமக்குள் உரையாடிக்கொள்வதாக ஒரு நம்பிக்கை கர்நாடகத்தில் உண்டு. ஒவ்வொரு வீட்டிலும் நடைபெறும் கதையை அந்த தீபங்கள் தங்களுக்குள் பரிமாறிக்கொள்வதாக அந்த நம்பிக்கை நீட்சி அடைகிறது. தீபங்களின் உரையாடலாக இந்தக் கதையாடலைக் காட்சிப்படுத்துகிறார் கிரீஷ் கார்னாட். மரபுவழிப்பட்ட நம்பிக்கையின் துணை கொண்டு மரபார்ந்த சில நம்பிக்கைகளைக் கேள்விக்கு உட்படுத்துகிறார்.
ISBN : 9788195978182
SIZE : 141.0 X 7.0 X 149.0 cm
WEIGHT : 140.0 grams