Your cart is empty.
நினைவுப் பாதை
தமிழ் நாவல் வடிவங்களின் எந்த வகைமைக்குள்ளும் அடங்க மறுக்கும் புதுக்குரல்கள் நகுலனின் நாவல்கள். கதையம்சத்தை முற்றாகவே தவிர்த்து, கட்டுப்பாடற்ற மனவோட்டங்களை முழுக்கவும் நனவோடை உத்தியில், மரபும் நவீனமும் … மேலும்
தமிழ் நாவல் வடிவங்களின் எந்த வகைமைக்குள்ளும் அடங்க மறுக்கும் புதுக்குரல்கள் நகுலனின் நாவல்கள். கதையம்சத்தை முற்றாகவே தவிர்த்து, கட்டுப்பாடற்ற மனவோட்டங்களை முழுக்கவும் நனவோடை உத்தியில், மரபும் நவீனமும் இழையோடும் மொழிநடையில் வெளிப்படுத்கிறது ‘நினைவுப் பாதை’ நாவல். “கதை கூறும் முறையிலும் பேசுவது போல் அனாயாசமாய் எழுதிக்கொண்டு செல்வதிலும் வெளியாகும் ஆசிரியரின் ஒரு அபோதமான, கட்டற்ற தன்மை, மிகுந்த அழகாகப்படுகிறது” என்று நகுலனின் ‘நிழல்கள்’ நாவலின் முன்னுரையில் சுந்தர ராமசாமி கூறுவது இந்த நாவலுக்கும் பொருத்தும்.
நகுலன்
நகுலன் (1921 – 2007) தனித்துவம் வாய்ந்த எழுத்தாளர்களில் ஒருவரான நகுலன் (இயற்பெயர் டி.கே. துரைசாமி) 1921இல் கும்பகோணத்தில் பிறந்து, திருவனந்தபுரத்தில் வாழ்ந்தவர். தமிழிலும் ஆங்கிலத்திலும் முதுகலைப் பட்டம் பெற்று, முப்பது ஆண்டுகள் ஆங்கில விரிவுரையாளராகப் பணியாற்றினார். கவிதைகள், நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள் எனப் பல தளங்களில் தொடர்ந்து இயங்கினார். ஆங்கிலத்திலும் எழுதினார். இவரது கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள் முழுத்தொகுப்புகளாக வெளிவந்துள்ளன. குமாரன் ஆசான் விருதும் சாந்தோம் கம்யூனிகேஷன் சென்டர் விருதும் பெற்றார். நகுலன் 17.5.2007இல் திருவனந்தபுரத்தில் காலமானார்.
ISBN : 9788189945138
SIZE : 14.0 X 1.0 X 21.4 cm
WEIGHT : 274.0 grams
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
மானசரோவர்
பகுத்தறிவின் எல்லையை உணர்வதிலும் உணர்த்துவதிலும் முக்கியப் பங்கு வகிப்பது ‘மானசரோவர்’ நாவலின் மு மேலும்