Your cart is empty.
பொய்த் தேவு
சமூக அந்தஸ்தில் அந்தணர் முதல் தீண்டாதார் வரை, நாசூக்கு நாராயணர்கள் முதல் ரவுடிகள்வரை, நிலச்சுவான்தார்கள் முதல் பிச்சைக்காரர் கள், பாலியல் தொழிலாளிகள் வரை வெவ்வேறு தளங்களில் பிரிந்தும் … மேலும்
வகைமைகள்: விற்பனையில் சிறந்தவை | விருதுபெற்ற எழுத்தாளர் | தமிழ் கிளாசிக் நாவல் |
சமூக அந்தஸ்தில் அந்தணர் முதல் தீண்டாதார் வரை, நாசூக்கு நாராயணர்கள் முதல் ரவுடிகள்வரை, நிலச்சுவான்தார்கள் முதல் பிச்சைக்காரர் கள், பாலியல் தொழிலாளிகள் வரை வெவ்வேறு தளங்களில் பிரிந்தும் இணைந்தும் உருவாகும் சமூக உறவுக் கண்ணிகளைச் சுருக்கமாகவும் நுட்பமாகவும் கோடிகாட்டுகிறது இந்நாவல். சமூக அமைப்பின் அதிகார அடுக்குகள் பற்றிய துல்லியமான படப்பிடிப்பும் இதில் உள்ளது. இரண்டு மூன்று தலைமுறைக்குச் சொத்து சேர்த்து வைத்திருப்பவர்களும், ஆண்டவனே கதி என்று கிடப்பவர்களும் நாவலில் உதிரிகளாக வந்து போகையில் ரவுடிகளும் கீழ்த்தட்டு மக்களும் கூடுதலான கவனம் பெறுகிறார்கள். நாவலின் மையமான கதாமாந்தர்களும் அவர்கள் பேணும் ஒழுக்கமும் சமூகத்தின் மையத்தை அல்லாமல் விளிம்பு நிலைகளைப் பிரதிபலிப்பது தற்செயலானதாக இருக்க முடியாது. சமூகத்தின் கீழ்த்தட்டுகள் குறித்த நாவலாசிரியரின் அக்கறையின் வெளிப்பாடாகவே இருக்க முடியும். தவிர, ஒரு ஊரின் வரலாறு என்பது அவ்வூரின் ‘சிறந்த’ மனிதர்கள் வரலாறு மட்டும் அல்ல என்ற பார்வையையும் இது வெளிப்படுத்துகிறது.
க.நா. சுப்ரமண்யம்
பொய்த் தேவு க.நா. சுப்ரமண்யம் (1912-1988) க.நா. சுப்ரமண்யம் 31.1.1912இல் தஞ்சை மாவட்டம் வலங்கைமானில் பிறந்தார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானப் பட்டதாரியான இவர் முழுநேர எழுத்தாளராகவே வாழ்ந்தார். நாவல், சிறுகதை, கவிதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு எனப் பல தளங்களில் செயல்பட்டார். ஐரோப்பியப் படைப்புகளை மொழிபெயர்ப்புகள் மூலம் தமிழ் வாசகர்களுக்குப் பரவலாக அறியச்செய்த பெருமை க.நா.சு.வுக்கு உண்டு. தமிழிலக்கியத்தின் சிறப்பான பகுதிகளைப் பற்றி ஆங்கிலத்தில் கட்டுரைகள் எழுதினார். சூறாவளி, சந்திரோதயம், இலக்கிய வட்டம் போன்ற இதழ்களின் ஆசிரியராகவும் இருந்தார். இவரது முதல் நாவல் ‘பசி’. சிறந்த படைப்பாளியான க.நா.சு., முன்னோடி விமர்சகராகவே தமிழ்ச் சூழலில் பெரிதும் அறியப்படுகிறார். 1979இல் குமாரன் ஆசான் நினைவு விருதும், 1986ஆம் ஆண்டுக்கான சாகித்திய அக்காதெமி விருதும் பெற்றார். 16.12.1988இல் புதுதில்லியில் காலமானார்.
ISBN : 9788189359874
SIZE : 14.0 X 1.3 X 21.7 cm
WEIGHT : 345.0 grams
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
மறியா தாமுவுக்கு எழுதிய கடிதம்
-கடந்த சில ஆண்டுகளில் சு.ரா. எழுதிய 12 கதைகளின் தொகுப்பு இந்நூல்.
சு.ரா.வின் புனைவுலகம் அ மேலும்