Your cart is empty.
புனலும் மணலும்
தமிழ்ப் புனைகதையின் களம் குடும்பப் பின்னணியிலிருந்து விலகி பரந்த பின்புலமாக உருப்பெற்று வந்த காலப் … மேலும்
வகைமைகள்: விற்பனையில் சிறந்தவை | விருதுபெற்ற எழுத்தாளர் | தமிழ் கிளாசிக் நாவல் |
தமிழ்ப் புனைகதையின் களம் குடும்பப் பின்னணியிலிருந்து விலகி பரந்த பின்புலமாக உருப்பெற்று வந்த காலப் பகுதியில் எழுதப்பட்ட நாவல் ‘புனலும் மணலும்.' சம்பிரதாயமான குடும்பப் பின்னணியும் அதன் சிக்கல்களும் இந்த நாவலிலும் உண்டு. ஆனால் அந்தச் சிக்கல்கள் மட்டுமே நாவலின் மையமல்ல... இந்நாவலின் மீது சொல்லப்பட்ட விமர்சனங்களைப் பின் தள்ளிவிட்டு 'புனலும் மணலும்' நாவல் இன்றும் சமகாலத்தன்மையுடன் நிலைத்திருக்கிறது. இன்று பரவலாக விவாதிக்கப்படும் பிரச்சனைகளுடன் படைப்பு காலத்தைக் கடந்து உறவுகொண்டிருக்கிறது. நாவல் எழுதப்பட்டு வாசிக்கப்பட்ட முன்கால மனநிலை இன்று மாறியபோதும் நாவல் நிகழ்காலத்துக்குரியதாக விளங்குவது, சமகாலப் பிரச்சனைகளின் தொடர்பால் என்று கருதுகிறேன். மேலும் அழுத்தமாகச் சொல்வதென்றால் இன்றைய பிரச்சனைகள் பற்றிய அறிகுறிகளை நாவல் பல ஆண்டுகளுக்கு முன்பாகவே அடையாளம் கண்டிருக்கிறது. படைப்பில் நிகழும் இந்த ‘தீர்க்கதரிசன’மே 'புனலும் மணலும்' நாவலை மறுவாசிப்பில் கூடுதல் கவனத்துக்குரியதாக்குகிறது.
ஆ. மாதவன்
ஆ. மாதவன் (1934) திருவனந்தபுரத்தில் பிறந்தவர் ஆ. மாதவன். பெற்றோர் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த செல்லம்மாள், ஆவுடைநாயகம். பள்ளி இறுதி வகுப்புவரையில் மலையாளக் கல்வி கற்ற மாதவனுக்கு மலையாள இலக்கியப் பரிச்சயம் தந்த வேகம், தமிழ்ப் படைப் புலகின் புதுமைப்பித்தன், க.நா.சு., லா.ச.ரா., தி. ஜானகிராமன், ந. பிச்சமூர்த்தி, கி. ராஜநாராயணன், சுந்தர ராமசாமி என்றெல்லாம் பரிச்சயம் கொள்ள வைத்தது. மலையாளம் கலந்த தமிழ் பேசும் திருவனந்தபுரத்துச் சாலை கடைத் தெரு வட்டாரமும், அதன் மக்களும் வியாபார உலகில் வாழ்வு நடத்தும் மாதவனுக்கு இலக்கியப் படைப்புச் சக்தியாக அமைந்தனர். 1974இல் வெளிவந்த ‘புனலும் மணலும்’ முதல் நாவல். தொடர்ந்து வெளிவந்த ‘கிருஷ்ணப் பருந்து’ நாவல் போன்றவை திருவனந்த புரத்துத் தமிழ் வாழ்வுச் சலனங்களின் பிரதிபலிப்புச் சித்திரங்களாயின. ‘இலக்கியச் சுவடுகள்’ என்ற திறனாய்வு நூலுக்காக சாகித்திய அக்காதெமி விருது பெற்றுள்ளார். தொடர்பு முகவரி: A. Madhavan M.R.A. 35 Ottukkal Street Kaithamukku Thiruvananthapuram 695 028
ISBN : 9788189359539
SIZE : 14.0 X 0.8 X 21.5 cm
WEIGHT : 209.0 grams
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
மறியா தாமுவுக்கு எழுதிய கடிதம்
-கடந்த சில ஆண்டுகளில் சு.ரா. எழுதிய 12 கதைகளின் தொகுப்பு இந்நூல்.
சு.ரா.வின் புனைவுலகம் அ மேலும்