Your cart is empty.
ராஜா வந்திருக்கிறார்
கு. அழகிரிசாமியின் கதைகள் எளிய நடை, சித்தரிப்பின் லாவகம், உள்ளோடும் துயர இழை, அல்லது மிதக்கும் நகைச்சுவை, கமழும் மண்ணின் மணம் என அழகுகள் கூடி வந்தவை. … மேலும்
வகைமைகள்: விற்பனையில் சிறந்தவை | விருதுபெற்ற எழுத்தாளர் | தமிழ் கிளாசிக் சிறுகதை |
கு. அழகிரிசாமியின் கதைகள் எளிய நடை, சித்தரிப்பின் லாவகம், உள்ளோடும் துயர இழை, அல்லது மிதக்கும் நகைச்சுவை, கமழும் மண்ணின் மணம் என அழகுகள் கூடி வந்தவை. தமிழில் சிறுகதைக்காக சாகித்திய அக்காடமி பரிசு பெற்ற முதல் எழுத்தாளர். ‘ராஜா வந்திருக்கிறார்’ என்ற அவரது இந்தத் தேர்ந்தெடுத்த கதைகளில் கு. அழகிரிசாமியின் கதைசொல்லும் பன்முக ஆற்றலின் கீற்றுகளை வாசகன் உணர முடியும்.
கு. அழகிரிசாமி
கு. அழகிரிசாமி (1923-1970) புதுமைப்பித்தன் பரம்பரை எழுத்தாளர். இடைசெவலில் பிறந்தவர். சென்னையிலும் மலேயாவிலும் பிரசண்டவிகடன், சக்தி, தமிழ்நேசன் முதலான பத்திரிகைகளில் பணியாற்றியவர். சிறுகதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு, பதிப்பு, நாடகம், கவிதை, நாவல் ஆகிய இலக்கிய வகைகளில் தனித்தன்மையுடன் செயல்பட்டவர். எளிய நடை, சித்திரிப்பின் லாவகம், உள்ளோடும் துயர இழை, மிதக்கும் நகைச்சுவை, கமழும் மண்ணின் மணம் என அழகுகள் கூடிவந்த கலை அழகிரிசாமியின் எழுத்து. எழுத்துலக அங்கீகரிப்பின் அடையாளமாக சாகித்திய அக்காதெமி விருது இறப்புக்குப் பின் அவருக்கு வழங்கப்பட்டது. தமிழில் சிறுகதைக்காக இப்பரிசைப் பெற்ற முதல் எழுத்தாளர். இத்தொகுப்பில் அவரது எல்லாக் கதைகளும் காலவரிசையில் இடம்பெறுகின்றன. பல கதைகள் முதன்முதலாக நூலாக்கம் பெறுகின்றன. நவீனத் தமிழ் இலக்கிய வரலாற்றில் கு. அழகிரிசாமியின் இடத்தை இத்தொகுப்பு நிலைநிறுத்தும்.
ISBN : 9789381969397
SIZE : 13.8 X 1.3 X 21.5 cm
WEIGHT : 307.0 grams
எஸ். ராமகிருஷ்ணன்
21 Oct 2024
கு.அழகிரிசாமியின் ராஜா வந்திருக்கிறார் கதை பற்றி எஸ். ராமகிருஷ்ணன்
https://www.youtube.com/watch?v=Qc-wtEfzEWM
எஸ். ராமகிருஷ்ணன்
3 Nov 2025
ராஜா வந்திருக்கிறார்: தீபாவளியன்று நான் சாப்பிடும் ஒரே இனிப்பு
- எஸ். ராமகிருஷ்ணன் பேச்சு (கு. அழகிரிசாமியின் சிறுகதை குறித்து)
முழுப்பேச்சையும் கேட்க:
Ku. Azhagirisaami (1923-1970) is one of the best short story writers of twentieth century Tamil literature. He has also written novels, plays, poetry, songs and translated many works into Tamil, including Maxin Gorky's books. He was awarded the Sahitya Akademi award in 1970. This book is a collection of his selected short stories. Raaja Vanthirukkiraar, the story this collection is titled after, has been translated to other Indian languages and Russian. The reader can get a complete picture of his accessible style with a thin line of sadness, and humour floating above the surface.
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
மறியா தாமுவுக்கு எழுதிய கடிதம்
-கடந்த சில ஆண்டுகளில் சு.ரா. எழுதிய 12 கதைகளின் தொகுப்பு இந்நூல்.
சு.ரா.வின் புனைவுலகம் அ மேலும்














