Your cart is empty.
தி. ஜானகிராமன் குறுநாவல்கள்
நுட்பமான சிறுகதைகள், தீர்க்கமான நாவல்கள் இவற்றுக்காக இலக்கிய வாசகர்களால் என்றும் நினைக்கப் படுபவர் தி. ஜானகிராமன். இந்த இரு புனைவு வடிவங்களைப் போலவே அவரது மேதமையை வெளிப்படுத்து … மேலும்
வகைமைகள்: விற்பனையில் சிறந்தவை | விருதுபெற்ற எழுத்தாளர் | குறுநாவல்கள் முழுத்தொகுப்பு | குறுநாவல் |
நுட்பமான சிறுகதைகள், தீர்க்கமான நாவல்கள் இவற்றுக்காக இலக்கிய வாசகர்களால் என்றும் நினைக்கப் படுபவர் தி. ஜானகிராமன். இந்த இரு புனைவு வடிவங்களைப் போலவே அவரது மேதமையை வெளிப்படுத்து பவை அவரது குறுநாவல்கள். சிறுகதையின் செரிவுடனும் நாவலின் களப்பரப்புடனும் அவர் எழுதிய ஏழு குறுநாவல்களின் தொகுப்பு இந்நூல். ஆண், பெண் உறவின் சிக்கலை, மனக் கோணலை, பரிதவிப்பை, ஆன்மீகப் பதற்றத்தை, நிறைவை, கச்சிதமான வடிவத்தில் மனதை ஈர்க்கும் நடையில் இந்த நீள் கதைகள் முன்வைக்கின்றன.
தி. ஜானகிராமன்
தி. ஜானகிராமன் (1921-1982) தி. ஜானகிராமன் தஞ்சை மாவட்டம் மன்னார்குடியை அடுத்த தேவங்குடியில் பிறந்தவர். பத்து வருடங்கள் பள்ளியாசிரியராகப் பணியாற்றியவர். பின்பு அகில இந்திய வானொலியில் பணியாற்றி ஓய்வுபெற்றார். கர்நாடக இசை அறிவும் வடமொழிப் புலமையும் பெற்றிருந்தவர். 1943இல் எழுதத் தொடங்கிய தி. ஜானகிராமன், ‘மோக முள்’, ‘அம்மா வந்தாள்’, ‘மரப்பசு’ உள்ளிட்ட ஒன்பது நாவல்கள், நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், மூன்று நாடகங்கள், பயண நூல்கள் ஆகியவற்றை எழுதினார். சிட்டியுடன் இணைந்து எழுதிய ‘நடந்தாய் வாழி காவேரி’ பயண இலக்கிய வகையில் முக்கியமான நூலாகக் கருதப்படுகிறது. ‘மோக முள்’, ‘நாலு வேலி நிலம்’ ஆகியன திரைப்படமாக்கப்பட்டுள்ளன. ‘மோக முள்’, ‘மரப்பசு’, ‘அம்மா வந்தாள்’ ஆகிய நாவல்களும் பல சிறுகதைகளும் இந்திய, ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. 1979இல் ‘சக்தி வைத்தியம்’ சிறுகதைத் தொகுப்பிற்கு சாகித்திய அக்காதெமி விருது வழங்கப்பட்டது.
ISBN : 9789386820136
SIZE : 13.9 X 1.7 X 21.5 cm
WEIGHT : 359.0 grams
Thi.Janakiraman was a literary auteur fondly remembered by Tamil readers for his nuanced short stories and powerful novels. His genius was equally expressed in the form of novellas too. They had both the nuances found in his short stories, and the wide thematic landscapes of his novels. This collection of seven novellas talk about relationships, their complications, spiritual anxieties, feeling of fulfillment and various twists and turns of the human mind.














