Your cart is empty.


தலைகீழ் விகிதங்கள்
மனிதனின் அகவேட்கைக்கும் யதார்த்தத்துக்குமான இடைவெளிகளை சமன் செய்வதே வாழ்வின் சவால். 70களில் கிராமப்புற பட்டதாரி இளைஞர்கள் உறவுகள் சார்ந்தும் நிலம் சார்ந்தும் எழுந்த நிர்பந்தங்களுக்கு தமது சுயத்தை … மேலும்
வகைமைகள்: விற்பனையில் சிறந்தவை | விருதுபெற்ற எழுத்தாளர் | தமிழ் கிளாசிக் நாவல் |
மனிதனின் அகவேட்கைக்கும் யதார்த்தத்துக்குமான இடைவெளிகளை சமன் செய்வதே வாழ்வின் சவால். 70களில் கிராமப்புற பட்டதாரி இளைஞர்கள் உறவுகள் சார்ந்தும் நிலம் சார்ந்தும் எழுந்த நிர்பந்தங்களுக்கு தமது சுயத்தை இழக்க நேரிட்டது. ஆனால் இன்றைய கணினியுக இளைஞர்கள் தனி அடையாளங்களை இழந்து பொது அடையாளங்களுக்குள் தங்களது இருப்பை பத்திரப்படுத்திக் கொள்கின்றனர். 'தலைகீழ் விகிதங்கள்' நாவலை இன்று படிக்கும்போது நேற்றைய தலைமுறையினரின் அகப் போராட்டங்களின் வழியாக, இன்றைய இளைஞர்களின் மனச் சிக்கல்களை நம்மால் அக்கறையுடன் அனுசரணையுடன் புரிந்துகொள்ள முடிகிறது. கூடவே, நவீன வாழ்வின் அபத்தங்களையும் அதன் இலக்கறியா பயணங்களையும்.
நாஞ்சில் நாடன்
நாஞ்சில் நாடன் (பி. 1947) நாஞ்சில் நாடன் (க. சுப்பிரமணியம்) குமரி மாவட்டத்திலுள்ள வீரநாராயணமங்கலம் என்னும் ஊரைச் சேர்ந்தவர். ‘தலைகீழ் விகிதங்கள்’ (1977) என்ற தம் முதல் நாவல் மூலம் இலக்கிய உலகில் பிரபலமானவர். ஆறு நாவல்கள், எட்டு சிறுகதைத் தொகுதிகள், இரண்டு கவிதைத் தொகுதிகள், ஆறு கட்டுரைத் தொகுதிகள் வெளிவந்திருக்கின்றன. நாஞ்சில் நாட்டு வாழ்க்கையையும் பெருநகர் வாழ்வின் அவலங்களையும் விவரிக்கும் நாஞ்சில் நாடன் கிராமிய வாழ்வின் மீது புனிதம் ஏதும் ஏற்றவில்லை. இழந்துபோன கிராமியத்தின் நிலைமையையும் தனது ஏக்கங்களையும் அவர் சுதந்திரமாக மறுபரிசீலனை செய்கிறார். இளமைப் பருவத்தைச் சொந்தக் கிராமத்திலும் பதினெட்டு ஆண்டுகள் மும்பையிலும் கழித்த நாஞ்சில் நாடன் தற்போது மனைவி, மகள், மகனுடன் கோவையில் வசிக்கிறார்.
ISBN : 9789380240176
SIZE : 14.0 X 1.5 X 21.4 cm
WEIGHT : 359.0 grams
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
மறியா தாமுவுக்கு எழுதிய கடிதம்
-கடந்த சில ஆண்டுகளில் சு.ரா. எழுதிய 12 கதைகளின் தொகுப்பு இந்நூல்.
சு.ரா.வின் புனைவுலகம் அ மேலும்