Your cart is empty.
சிறுகதை, நாவல்களில் சாதனைப் புகழ் ஈட்டிய தி. ஜானகிராமன் எழுதிய முதலாவது பயணக் கதை இது. அவரது தனித்துவமான கலைத் திறனால் முன்னுதாரணமற்ற பயண நூலாகவும் நிலைபெற்றிருக்கிறது.
ஜப்பானில் தங்கியிருந்தும் பயணம் செய்தும் பெற்ற அனுபவங்களை தி. ஜானகிராமன், புனைகதைக்குரிய அழகுடனும் சுற்றுலாக் கையேட்டுக்குரிய நுட்பமான தகவல்களுடனும் இந்தக் கட்டுரைகளில் முன்வைக்கிறார்.அந்த நாட்டின் இயற்கை வளத்தையும் பொருளாதார மேம்பாட்டையும் பண்பாட்டுப் பின்புலத்தையும் கலை மேன்மையையும் அந்த மண்ணின் மக்களை முன்னிருத்தியே விவரிக்கிறார். ஒரு பயணக் கதையை வாசக மனதை விட்டு அகலாத இலக்கியப் படைப்பாகத் தமது மந்திரச் சொற்களால் உருவாக்கியிருக்கிறார் தி. ஜானகிராமன்.
ISBN : 9789355232564
SIZE : 140.0 X 8.0 X 217.0 cm
WEIGHT : 160.0 grams
வைதேகி தாயுமானவன் (readsandscenes)
22 Oct 2025
தி. ஜானகிராமனின் ஜப்பான் பயண அனுபவ நூல்
உதய சூரியன் பற்றிய பார்வை
தி.ஜா. அவர்கள் மேற்கொண்ட ஜப்பான் பயணம் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக்கு முன். ஆனாலும் அவர் பகிர்ந்திருக்கும் ஜப்பானின் அழகு, அதன் கலாச்சாரம், ஜப்பானிய மக்களின் பண்புகள் இன்றும் மாறாமல் இருக்கின்றன என்பதை நினைக்கும்பொழுது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.
அனுபவமிக்க எழுத்தாளராக இருந்தாலும் தான் முதன் முதலாகக் கொண்ட வியப்புகள் நிறைந்த ஜப்பான் பயண அனுபவங்களை வெகுளியாகப் பகிர்ந்திருப்பது அழகு!
நன்றி: வைதேகி தாயுமானவன் (readsandscenes) இன்ஸ்டகிராம் பதிவு
முழுப்பதிவையும் வாசிக்க:
https://www.instagram.com/p/DQHBe4xjK_2/?hl=en














