Your cart is empty.
வாசனை
தமிழின் முக்கியமான படைப்பாளிகளில் ஒருவரான சுந்தர ராமசாமி 1955முதல் 2004வரை ஐம்பது ஆண்டுகளில் எழுதியவற்றிலிருந்து … மேலும்
வகைமைகள்: விற்பனையில் சிறந்தவை | விருதுபெற்ற எழுத்தாளர் | தமிழ் கிளாசிக் சிறுகதை |
தமிழின் முக்கியமான படைப்பாளிகளில் ஒருவரான சுந்தர ராமசாமி 1955முதல் 2004வரை ஐம்பது ஆண்டுகளில் எழுதியவற்றிலிருந்து தேர்ந்தெடுத்த கதைகளைக் கொண்ட தொகுப்பு இது. அவருடைய கதையுலகம், எழுத்து முறை, மொழி, கதைக்களம், கதைகளில் வெளிப்படும் பார்வை, கலைத்திறன் ஆகியவை காலப்போக்கில் எவ்வாறு மாறிவந்திருக்கின்றன என்பதைக் காட்டும் மாதிரிகள் இவை.
தொடர்ந்து தன்னைப் புதுப்பித்துக்கொண்டே இருந்த ஒரு படைப்பாளியின் இலக்கியப் பயணத்தின் தடங்களை இக்கதைகளில் காணலாம். காலம் கடந்து நிற்கும் தன்மையும் மறு வாசிப்புகளில் புதிதாக வெளிப்படுத்திக்கொள்ளும் தன்மையும் கொண்ட இந்தக் கதைகள் கிளாசிக் தொகுப்பாக வெளியாகின்றன. இக்கதைகளின் அழகியல் கூறுகள், மொழி நேர்த்தி, நுட்பமான அவதானிப்புகள், பாத்திர வார்ப்புகள் ஆகியவற்றின் மூலம் வாசகர் பெறும் கலையனுபவம் அபூர்வமானது..
சுந்தர ராமசாமி
சுந்தர ராமசாமி (1931 - 2005) தமிழின் முன்னோடி எழுத்தாளர்களில் ஒருவரான சுந்தர ராமசாமி நாகர்கோவிலில் பிறந்தார். பள்ளியில் மலையாளமும் ஆங்கிலமும் சமஸ்கிருதமும் கற்றார். 1951இல் ‘தோட்டி யின் மக’னைத் தமிழில் மொழிபெயர்த்ததே முதல் இலக்கியப் பணி. 1951இல் புதுமைப்பித்தன் நினைவு மலரை வெளியிட்டார். இவரது முதல் கதையான ‘முதலும் முடிவும்’ அதில் இடம் பெற்றது. மூன்று நாவல்களும் பல கட்டுரைகளும் சுமார் 60 சிறுகதைகளும், பசுவய்யா என்ற பெயரில் கவிதைகளும் எழுதினார். 1988இல் காலச்சுவடு இதழை நிறுவினார். சுந்தர ராமசாமிக்கு டொரொன்டோ (கனடா) பல்கலைக்கழகம் வாழ்நாள் இலக்கியச் சாதனைக்கான ‘இயல்’ விருதை (2001) வழங்கியது. வாழ்நாள் இலக்கியப் பணிக்காகக் ‘கதா சூடாமணி’ விருதையும் (2003) பெற்றார். சுந்தர ராமசாமி 14.10.2005 அன்று அமெரிக்காவில் காலமானார்.
ISBN : 9789380240473
SIZE : 14.0 X 1.8 X 21.5 cm
WEIGHT : 408.0 grams
A selection of short stories by Sundara Ramaswamy.
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
மறியா தாமுவுக்கு எழுதிய கடிதம்
-கடந்த சில ஆண்டுகளில் சு.ரா. எழுதிய 12 கதைகளின் தொகுப்பு இந்நூல்.
சு.ரா.வின் புனைவுலகம் அ மேலும்














