Your cart is empty.
வாழ்விலே ஒரு முறை
துளியும் அலங்காரம் இல்லை. அழுத்தமான சொற்கள் இல்லை. மிகுபுனைவு,
மாய யதார்த்தம் முதலான கூறுகள் இல்லை. மாமனிதர்கள் இல்லை. தத்துவ
விசாரங்களும் இல்லை. என்றாலும் அசோகமித்திரனின் கதைகள்
… மேலும்வகைமைகள்: விற்பனையில் சிறந்தவை | விருதுபெற்ற எழுத்தாளர் | முதல் சிறுகதைத் தொகுதி |
துளியும் அலங்காரம் இல்லை. அழுத்தமான சொற்கள் இல்லை. மிகுபுனைவு,
மாய யதார்த்தம் முதலான கூறுகள் இல்லை. மாமனிதர்கள் இல்லை. தத்துவ
விசாரங்களும் இல்லை. என்றாலும் அசோகமித்திரனின் கதைகள்
வாசகரிடத்தில் ஆழமான சலனங்களை ஏற்படுத்துகின்றன. மறக்க முடியாத
அனுபவத்தைத் தருகின்றன. வாழ்க்கைப் பார்வையை மறுபரிசீலனை செய்யத்
தூண்டுகின்றன. மிகவும் நேரடியான,
எளிமையான மொழியில், மிகச் சாதாரணமான நிகழ்வுகளை அதிராமல்
சொல்லிச் செல்வதன் மூலம் அசோகமித்திரன் இதைச் சாதிக்கிறார். தன்
அனுபவங்களைக் கதைப்பொருளாக்குவதிலும் அவற்றைக்
கதைகளாக்குவதிலும் விளக்க இயலாத மிக நுட்பமான ரசவாதம் அவரிடத்தில்
செயல்படுகிறது. அதுவே அசோகமித்திரனின் கலை.
குறிப்பிட்டுச் சொல்ல முடியாத அன்றாட நிகழ்வுகளையும் சாமானிய
மனிதர்களையும் வைத்துக்கொண்டு அசோகமித்திரன் ஏற்படுத்தும் தாக்கம்
அபாரமானது. கிட்டத்தட்ட 60 ஆண்டுகள் படைப்புச் செயல்பாட்டில்
ஈடுபட்டிருந்த அசோகமித்திரனின் முதல் தொகுப்பிலேயே அவருடைய கலை
மேதமை வெளிப்பட்டுவிட்டது. இலக்கிய வாசகர்கள் அசோகமித்திரனை எந்தக்
காரணங்களுக்காகக் கொண்டாடுகிறார்களோ அந்தக் காரணங்களை அவருடைய
முதல் தொகுப்பிலுள்ள கதைகளிலேயே காண முடியும்.
வாழ்விலே ஒரு முறை என்னும் இந்தத் தொகுப்பு அசோகமித்திரனின் முதல்
சிறுகதைத் தொகுப்பு என்ற முறையில் மட்டுமல்ல; அவருடைய ஆகச் சிறந்த
கதைகளில் சிலவற்றைக் கொண்ட தொகுப்பு என்ற முறையிலும்
முக்கியத்துவம் வாய்ந்தது.
அசோகமித்திரன்
அசோகமித்திரன் (1931-2017) இயற்பெயர் ஜ. தியாகராஜன். செகந்தராபாத்தில் பிறந்தார். மெஹ்பூப் கல்லூரியிலும் நிஜாம் கல்லூரியிலும் ஆங்கிலம், இயற்பியல், வேதியியல் படித்தார். தந்தையின் மறைவுக்குப்பின் இருபத்தொன்றாம் வயதில் குடும்பத்துடன் சென்னைக்குக் குடியேறினார். கணையாழி மாத இதழின் ஆசிரியராக பல ஆண்டுகள் பணியாற்றினார். 1951 முதல் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதினார். சிறுகதை, குறுநாவல், நாவல், கட்டுரை, விமர்சனம், சுய அனுபவப் பதிவு போன்ற பிரிவுகளில் 60 நூல்களுக்கு மேல் எழுதியிருக்கிறார். பல இந்திய மொழிகளிலும் சில ஐரோப்பிய மொழிகளிலும் இவரது நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. 1973இல் அமெரிக்காவின் அயோவா பல்கலைக்கழகத்தின் எழுத்தாளர்களுக்கான சிறப்புப் பயிலரங்கில் கலந்துகொண்டவர். 1996ஆம் ஆண்டு சாகித்திய அக்காதெமி விருது பெற்றார். அசோகமித்திரன் தனது 85வது வயதில், 23.03.2017 அன்று சென்னை வேளச்சேரியில் காலமானார். மனைவி: ராஜேஸ்வரி. மகன்கள்: தி. ரவிசங்கர், தி. முத்துக்குமார், தி. ராமகிருஷ்ணன்.
ISBN : 9789381969960
SIZE : 14.1 X 1.5 X 21.6 cm
WEIGHT : 301.0 grams
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
மறியா தாமுவுக்கு எழுதிய கடிதம்
-கடந்த சில ஆண்டுகளில் சு.ரா. எழுதிய 12 கதைகளின் தொகுப்பு இந்நூல்.
சு.ரா.வின் புனைவுலகம் அ மேலும்