Your cart is empty.
விரும்பத்தக்க உடல்
வாகன விபத்தில் மூளைச்சாவு ஏற்பட்ட ஒருவரது உடலை பல உறுப்புகள் செயலிழந்த நிலையில் கிடக்கும் செதெரீக்கின் தலையுடன் இணைக்கும் உறுப்புமாற்று அறுவைச்சிகிச்சை வெற்றி பெறுகிறது. செதெரீக்கின் தந்தை … மேலும்
வாகன விபத்தில் மூளைச்சாவு ஏற்பட்ட ஒருவரது உடலை பல உறுப்புகள் செயலிழந்த நிலையில் கிடக்கும் செதெரீக்கின் தலையுடன் இணைக்கும் உறுப்புமாற்று அறுவைச்சிகிச்சை வெற்றி பெறுகிறது. செதெரீக்கின் தந்தை பெரும் செல்வந்தராகையால் இது சாத்தியமானது. இந்த அறிவியல் புரட்சியின் தலைமகன் செதெரீக், உடல் உபாதைகள், உளவியல் சிக்கல்கள் எனப் பல சவால்களை ஏற்கவேண்டிய இக்கட்டுக்கு ஆளாகிறான். இயற்கையின் முடிவினை எதிர்க்கவும், தவிர்க்கவும், துணியும் இந்த அறிவியல் முயற்சியின் முடிவு என்ன என்பதை பல மர்மமுடிச்சுகளோடு சுவாரசியமாக விவரிக்கிறார் இப்புதின ஆசிரியர் உய்பெர் அதாத். இக்கதையின் கற்பனை நிறைவேறும் நாள் முதல் நமக்கு நெருக்கமான சொந்தங்கள், நண்பர்கள், சான்றோர்கள், தலைவர்கள், பிரபலங்கள் என எல்லோரும் ஏதோ ஒரு வடிவில் நீண்டகாலம் தொடர்ந்து வாழ்ந்துகொண்டிருப்பார்கள். எதிர்கால உலகின் அளப்பரிய அறிவியல் ஆற்றலால் விளையவிருக்கும் விபரீதங்களை விவாதிக்கத்தூண்டும் புனைவு இது.
உய்பெர் அதாத்
உய்பெர் அதாத் (1947) நவீன பிரஞ்சு இலக்கியத்தின் முக்கிய படைப்பாளிகளில் ஒருவரான உய்பெர் அதாத், துனிசியாவில் பிறந்தவர். உய்பெர் அதாத்தின் பெற்றோர் 1950இல் பிரான்சுக்கு மேற்கொண்ட புலம்பெயர்வு பிரஞ்சு இலக்கிய உலகுக்கு நல்வரவாக அமைந்தது. 60களின் இறுதியில் எழுதத் தொடங்கிய அதாத், கவிதைகள் மூலம் பிரஞ்சு வாசகர்களுக்கு அறிமுகமானார். விரைவிலேயே சிறுகதை, புதினம், கட்டுரை, நாடகம், ஓவியம் எனப் பல்வேறு வகைமைகளில் தன் படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். சொந்தமாக சில இலக்கிய இதழ்களைத் தொடங்கி நடத்திய அதாத், ‘அப்புய்லே’ இலக்கிய இதழின் ஆசிரியராக இயங்கிக்கொண்டிருக்கிறார். சக எழுத்தாளர்களுடன் இணைந்து இலக்கியப் பயிற்சிப் பட்டறைகளையும் நடத்திவருகிறார். தன் படைப்புகளுக்காக பல்வேறு இலக்கியப் பரிசுகளை உய்பெர் அதாத் வென்றுள்ளார். 2015இல் வெளியாகிய “விரும்பத்தக்க உடல்” எனும் இப்புதினம், பிரஞ்சு வாசகர்கிளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதுடன் பல விவாதங்களையும் எழுப்பி வருகிறது.
ISBN : 9789386820648
SIZE : 15.0 X 0.7 X 22.9 cm
WEIGHT : 198.0 grams
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
என்னை மாற்று
-ஸிந்தஸிஸ் எனும் செயற்கைப் பொருள் உற்பத்தி நிறுவனத்தின் உற்பத்திப் பொருள்களை
உண்டு வாழும் மேலும்
ஒரு பெண்மணியின் கதை
-அன்னி எர்னோ 2022ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றவர். இந்நூலில் அவர்
1986 ஆம் மேலும்