Your cart is empty.
கற்றாழை
பெண்ணுலகம் எதனையெல்லாம் கொண்டு துயருறுகிறது? அவர்களுக்குத் தங்களின் மனங்கள்போலவே உடல்களும் சுமையாக மாறுகின்றன. தன்னிலையைச் சமூக நிலையோடு பொருத்த வேண்டிய அவசியத்துக்குள்ளும் திணிக்கப்படுகிறார்கள். அந்தப் போராட்டங்களின் அவசங்களையும் மன எழுச்சியையும் இயல்பான சொற்களுக்குள் வடித்தெழுதுகிறார் கிருத்திகா. பெண்களின் அக உலகம் அவர்கள் உடல்களினின்றும் வேறானவையல்ல என்பதை ஒரு பெண்ணின் பார்வையில் சொல்லும் கதைகள் இவை.



















