Your cart is empty.
புனிதப் பாவங்களின் இந்தியா
-
நவீன வாழ்வின் இயல்பான காட்சி பிம்பங்களைக் கவிதைக்குள் புகுத்துகையில் அச்சொற்கள் ஒரு மாயக் கணத்தைக மேலும்
"பதினேழாம் நூற்றாண்டில் வெற்றிகரமாகத் தொடங்கிய ஃபிரான்சின் கீழ்த்திசைக் காலனியாக்கப் பயணம், பதினெ மேலும்
தான் எதிர்கொள்கிற கணங்களில் ஒளிந்திருக்கும் வேறொன்றை அத்துணை ஆசையோடு கண்டடையும் இக்கவிதைகள், நழுவும் அழகிற்காகவும் தருணத்து உண்மைக்காகவும் விழிப்புடன் தன்னைத் திறந்துவைக்கின்றன. இயற்கையின் முன்னமர்ந்து மானுட மனம் எப்படியெப்படியெல்லாம் பையப் பைய குணமடைகிறது? அப்பாலும் இப்பாலும் ஒன்றையொன்று எந்த அளவுக்குச் சார்ந்துள்ளன? பார்த்தல் எனும் உயிர்ச்செயல்பாடு பிரார்த்தனைக்கும் ஊழ்கத்திற்கும் எப்புள்ளியில் இணை என்றாகிறது? போன்றவற்றை அணுக்கமாக உணர்த்துவதன் மூலம் ஓர் அடர்ந்த சாயங்காலப்பொழுதின் பரவசத்தை, தொலைவை, இன்னொரு உலகத்தன்மையை, விடுதலையை, மோனத்தை என யாவற்றையும்அளிக்கும் கவிதைகள் இவை.
இன்று வாழ்வை முழுநேரமும் தர்க்கப்படுத்திக்கொண்டிருக்கு
தம் ரத்த உறவுகளின் மீது உயிரனைய நேசம் வைத்திருக்கும் எளிய மனிதர்களின் ஈரச் சித்திரம் இத்தொகுப்பின் பெரும்பான்மையான கதைகளில் தீட்டப்பட்டுள்ளது. குறைவான சொற்களில் பாத்திரங்களின் அகநிலைகள் சாத்தியப்படுத்தப்பட்டுள்ள கலை அமைதி கூடிய இந்தக் கதைகளில் சிறார் உலகின் பரிசுத்தம் , பெண்களின் நிகழ் - கடந்த காலத் துயர், குடும்ப அமைப்பில் ஆண்களின் புற - அக நெருக்கடிகள், முதியவர்களின் நோய்மை படிந்த தனிமை, அதிகாரத்தின் முன் சாதாரணமானவர்கள் ஒன்றுமில்லாமல் ஆக்கப்படுதல், பாலியல் விருப்பு, மீறல் ஆகியவை நம் மனத்தின் சமன் குலையும் விதத்தில் பதிவாகியுள்ளன. இத்தொகுப்பில் ‘முடிவு’ கதையைக் கடக்க முடியவில்லை. நழுவும் வேட்டியைக் கட்டிக்கொண்டே ஆஸ்பத்திரிக்கு மகளைத் தூக்கிச் செல்லும் தகப்பனைப் பற்றிய இக்கதை கே.என். செந்திலின் கலைஉச்சம் என்று கூறலாம்.
சக உயிர்களின் இழப்பும் பிரிவும் ஒரு பிரபஞ்சத் துயரமாகிவிடும்போது அச்சமயத்திற்கான மீட்சிபோல தன்னியல்பாகப் புனைவாகியுள்ள இக்கதைகளின் வாசிப்பனுபவம் ஓட்டுமொத்த மானுடத்தின் மீது நம் கரிசனம் குவியும் இடத்திற்கு நம்மை நகர்த்துகிறது. இது இக்கதைகளை மேலும் முக்கியத்துவமானதாக ஆக்குகிறது.
அரபுப் பண்பாட்டின் படைப்புலகை அறிந்துகொள்ள கொஞ்சமும் வழியில்லாதிருந்த நிலையில், அந்தப் படைப்பு வெளியைத் திறந்திருக்கின்றது ‘கிறுக்கி'.
படைப்புலகம் என்ற வார்த்தையைச் சற்றே திருத்தம் கொண்டு வாசிப்பதாயிருந்தால், 'படைப்புக் கனல்' என்று வாசிக்க வேண்டியிருக்கும். மூடுண்ட உலைக் களத்தைத் திறக்கும்போது அதன் வெம்மை மூச்சுத் திணற வைக்கின்றது நம்மை!
நவீன சிந்தனையுலகைத் தன் படைப்புலகின் வாயிலாக அரபுலகம் எட்டிப் பிடித்திருக்கின்றதா என்ற கேள்வி நம்மிடையே இதுவரை இருந்து வந்தது. அந்தக் கேள்வியை இப்போது இல்லாதொழிக்கின்றது இத்தொகுப்பு.
நவீன வாழ்வின் இயல்பான காட்சி பிம்பங்களைக் கவிதைக்குள் புகுத்துகையில் அச்சொற்கள் ஒரு மாயக் கணத்தைக் கண்டடைகின்றன நந்தாகுமாரனின் கவிதைகளில். நந்தாகுமாரனின் பிரவாகமான கவிதை மொழி சில கவிதைகளில் பிரவாகத்தை நிறுத்தித் தத்தளிப்பையும் பகடியையும் கைமாற்றுகிறது. வாரி இறைக்கப்படும் சொற்களுக்கு மத்தியிலும் கவிதையின் தருணங்கள் கூடுகின்றன. கவிதையொன்று கவிதையாகாமலிருப்பதன் பின்னணியையும் நந்தாவின் கவிதை மொழி விசாரிக்கிறது. இத்தொகுப்பின் தனித்துவமாக இவ்விசாரணையைக் காணமுடியும்.
"பதினேழாம் நூற்றாண்டில் வெற்றிகரமாகத் தொடங்கிய ஃபிரான்சின் கீழ்த்திசைக் காலனியாக்கப் பயணம், பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நிராசையாய் முடிந்தது. தொடர்ச்சியான இராணுவ நடவடிக்கைகள் தோல்வியில் முடிந்தபிறகு, பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஃபிரான்சின் பயணத்தின் நோக்கமும் திசையும் அணுகுமுறையும் மாறியது. அதற்கேற்ப, மக்களின் மனங்களை வென்று அரவணைத்துக் கொள்வதன் மூலம் காலனியை நிரந்தரமாக்கிக்கொள்ளும் முயற்சிகள் தொடங்கின. ஒருபுறம் மக்களையும் நிர்வாகத்தில் பங்கேற்கச் செய்வது, மற்றொருபுறம் கலாச்சாரப் பிணைப்புகளை வலுப்படுத்துவது என்ற இரு வழிகளில் பல்வேறு முயற்சிகளை அரசு முன்னெடுத்தது. ஆனால் எதிலும் முழுமையடையாத இந்த அணுகுமுறை, இரட்டைக்கிளவியாய் அமைந்துவிட்டதால் ஃபிரான்சின் நோக்கம் நிறைவேறாமல் போனது.
அந்தக் காலகட்டத்தில், புதுச்சேரியிலிருந்து அடிமைகளாக அயலகம் ஏற்றுமதியான அடித்தட்டுமக்கள், தொடக்கக் காலங்களில் பட்ட துயரங்களையும், அதற்கு நேர்மாறாக ஃபிரஞ்சு இராணுவப் போர்வீரர்களாகச் சென்றோர் பெற்ற ஏற்றங்களையும் சொந்த மண்ணில் உள்ளூர்க் குடிமக்கள், தங்களின் வாழ்வுரிமைக்கும் வாக்குரிமைக்கும் நடத்திய போராட்டங்களையும், பெருந்தொற்றாய் வந்து தாக்கிய வைசூரியையும் பெருமழையாய், பஞ்சமாய்த் தாக்கிய பேரிடர்களையும் எதிர்கொள்ள முடியாமல் பாமர மக்கள் பட்ட துன்பங்களையும், வழிவழியாய் வந்த வழக்காறுகள் நாகரிக வளர்ச்சியின் தாக்கத்தால் மங்கியும் மடிந்தும் போனதையும், ஆண்டவர்கள் அகன்றாலும் இன்றும் காண்குறும் அவர்தம் வரலாற்று வடுக்களையும் பற்றிய பின்னணித் தகவல்களின் திரட்டே இந்நூல்."