Your cart is empty.
பூதமடம் நம்பூதிரி
தமிழக நாட்டார் வழக்காற்றியல் செய்திகளைச் சேகரிக்கச் சென்ற ஆய்வாளரின் அனுபவப் பதிவுகளும் ஆய்வும் அடங்கியது இந்நூல். பண்பாட்டில்மேல் கீழ் என்பதில்லை; இப்படிப் பகுப்பதற்கான விதிமுறைகள் பிறப்பு, பணம், செல்வாக்குக் காரணமாக உருவாயின. மரபில் தொடரும் விழுமம் சாதி தாண்டி இருப்பதுண்டு. இன்றைய புரட்சிகரமான எண்ணங்கள் பழைய பண்பாட்டிலும் உண்டு. எழுத்துவடிவ வரலாற்றுச் சான்றுகளுக்கு மாறான வாய்மொழிச் சான்றுகள் பெருமளவில் தொகுக்கப்படவில்லை. இப்படிப் பல செய்திகள் அடங்கியது இந்த நூல். அ.கா. பெருமாள் எழுதிய ‘வயல்காட்டு இசக்கி’ நூலின் தொடர்ச்சி. தெ.வே. ஜெகதீசன்