Your cart is empty.
கன்னட இலக்கித்தின் புகழ்பெற்ற எழுத்தாளர்களில் ஒருவரான வசுதேந்த்ராவின் கதைகள் அடங்கிய இந்தத் தொகுப்பு தனித்துவமானது. தன்பாலின ஈர்ப்புக் கொண்ட ஒருவனின் கதைகளைச் சொல்லும் இந்தத் தொகுப்பு புனைவுலகில் பேசாப்பொருளைத் துணிந்து பேசுகிறது.
தன்பாலினச் சேர்க்கையில் ஈடுபடுபவர்களைப் பற்றி மோகனசாமி என்னும் கதாபாத்திரத்தின் வழியே பேசும் இந்தக் காதல் கதைகள் புனைவுலகின் புதிய வாசல்களைத் திறக்கின்றன. மோகனசாமியின் நெருங்கிய நண்பன் அவனை விட்டுப் பிரிந்து ஓரு பெண்ணை மனந்துகொள்கிறான். இந்தப் பிரிவு அவனைப் பெரும் மன நெருக்கடிக்குள் தள்ளிவிடுகிறது. தன்பாலின உறவாளர்களிடையே நிலவும் இதுபோன்ற சிக்கல்களுடன் அவர்களுக்குப் பொதுவாக இருக்கும் உளவியல் சிக்கல்களையும் சமூகத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களையும் படைப்பாற்றலுடன் பிரதிபலிக்கும் கதைகள் இவை.
எளிமையும் அழகும் கூடிய வசுதேந்த்ராவின் எழுத்து மாற்றுப் பாலினத் தேர்வாளர்களின் வலியை அழுத்தமாகக் கடத்துகின்றன. மிக நெருங்கிய உறவினர்களிடமிருந்தும் அவர்கள் அனுபவிக்க நேரும் கொடுமைகளையும் இக்கதைகள் அம்பலப்படுத்துகின்றன.
தன்னுடைய தன்பாலின ஈர்ப்பை வெளிப்படையாக அறிவித்துக்கொண்டவரான வசுதேந்த்ரா இந்தக் கதைகளில் அத்தகைய ஒருவனின் அக, புற உலகினூடே துணிச்சலுடன் பயணிக்கிறார். மானுட உறவுகளின் இதுவரை வெளிச்சத்துக்கு வராத பல்வேறு பகுதிகளைத் தயங்காமல் நம் பார்வைக்கு வைக்கிறார்.
ISBN : 9789355232687
SIZE : 140.0 X 12.0 X 216.0 cm
WEIGHT : 310.0 grams